உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்., 12ல் துவக்கம்! 16ல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்வர்

கர்நாடக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்., 12ல் துவக்கம்! 16ல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்வர்

பெங்களூரு: கர்நாடக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ல், துவங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளில் கவர்னர் உரையாற்றுகிறார். 16ம் தேதி, முதல்வர் சித்தராமையா, 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், 135 தொகுதிகளில் வெற்றி பெற்று, முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதி திட்டங்கள், 2023 - 24ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா, 3 லட்சத்து 27 ஆயிரத்து 747 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அமைச்சரவை கூட்டம்

இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக, நேற்று நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.பிப்ரவரி 12ம் தேதி கூட்டத்தொடர் துவங்குகிறது. பிப்., 23ம் தேதி வரை நடக்கிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல் நாளில், கூட்டு கூட்டத்தொடரில் உரையாற்றுகிறார்.அதன்பின், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ், விவாதம் நடக்கும். இதையடுத்து, பிப்., 16ம் தேதி, முதல்வர் சித்தராமையா 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

15வது பட்ஜெட்

இது, அவர் தாக்கல் செய்யும் 15வது பட்ஜெட். இதன் மூலம், நாட்டில் அதிகபட்ச பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமை சித்தராமையாவுக்கு கிடைக்கும்.துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். இறுதியில், அரசு தரப்பில் முதல்வர் பதில் அளிப்பார். நடப்பு நிதியாண்டில், 3.27 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், அடுத்த நிதியாண்டிற்கு, 3.35 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பட்ஜெட் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் துறை ரீதியாக முதல்வர் சித்தராமையா, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இளைஞர்கள்

அதன்பின், வெவ்வேறு சங்க பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை கேட்க திட்டமிட்டுள்ளார். இம்முறை, பெண்கள், இளைஞர்களுக்கு அதிகபட்ச நல திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.இதற்காக, அவரது அரசியல் ஆலோசகர் சுனில் கனுகோலுவிடம் ஆலோசனை நடத்தவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி