உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார் ஜெகதீஸ் ஷெட்டர்

மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார் ஜெகதீஸ் ஷெட்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இன்று (ஜன.,25) மீண்டும் பா.ஜ.,வில் ஜெகதீஸ் ஷெட்டர் இணைந்தார்.கடந்த 2023 சட்டசபை தேர்தலில், ஹூப்பள்ளி - தார்வாட் தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர், சீட் எதிர்பார்த்தார். ஆனால், புதியவர்களுக்கு மேலிடம் வாய்ப்பளித்ததால், கொதிப்படைந்த அவர் பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்து போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். அதன் பின் இவரை எம்.எல்.சி.,யாக காங்., மேலிடம் தேர்வு செய்தது. அதிக எதிர்பார்ப்புடன், காங்கிரசில் இணைந்த ஷெட்டருக்கு, இங்குள்ள சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஷெட்டரை பா.ஜ.,வுக்கு அழைத்து வர, மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகம் வந்தார். அவருடன் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா உடன் இருந்தார். இதையடுத்து இன்று மீண்டும் அவர் பா.ஜ.,வில் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தத்வமசி
ஜன 25, 2024 22:21

குறிப்பிட்ட வயதுக்கு மேலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.


sankaranarayanan
ஜன 25, 2024 21:04

காங்கிரசு அணையிலிருந்து ஷட்டர் திறக்கப்பட்டுவிட்டார் இனி அவர் பா.ஜா. பாவில் இணைவார் ஷட்டர் திறக்கப்பட்டுவிட்டதால் இனி காங்கிரசிலிருந்து நிறைய எம்எல்.ஏ, க்கள் தண்ணீரைப்போல வெளியே வந்துவிடும்


Jysenn
ஜன 25, 2024 20:04

No comments.


பேசும் தமிழன்
ஜன 25, 2024 19:58

நல்லது.... செத்து கொண்டு இருக்கும்.... கான் கிராஸ் கட்சிக்கு யாரும்... தண்ணீர் கொடுக்க தேவையில்லை.... கர்நாடகாவில் ஒரு சீட் கூட தேச விரோத கான் கிராஸ் கட்சிக்கு கிடைக்க கூடாது.


K.ANBARASAN
ஜன 25, 2024 19:45

செட்டர் அவர்களே ஒரே இடத்தில் செட்டில் ஆகுங்க


நரேந்திர பாரதி
ஜன 25, 2024 16:08

ரெண்டுமே தேவையில்லாத ஆணிகள்


rsudarsan lic
ஜன 25, 2024 14:50

யாருக்கும் வெட்கமில்லை


duruvasar
ஜன 25, 2024 13:56

ஜாமீனில் எடுப்பதை மறுபடியும் போக்குகாட்டினால் செந்தில் பாலாஜியும் இந்த மாதிரி செய்ய வாய்ப்பிருக்கிறது.


KV Pillai
ஜன 25, 2024 13:44

இவரை எம்.எல்.சி.,யாக காங்., மேலிடம் தேர்வு செய்தது. நன்றி ஜெகதீஸ் ஷெட்டர் அவர்களே.


திருநெல்வேலிகாரன்
ஜன 25, 2024 13:41

ஹாஹாஹா


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை