மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10
தகவல் கொடுப்பது யார்?கோலார் மாவட்ட பா.ஜ.,வில் கோளாறே இல்லையென சொல்லிக்கிட்டாலும், நமக்குள் நடக்கும் விஷயங்களை நம்மவரே மீடியாக்களுக்கு தெரிவித்து, பெருசுபடுத்தி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துறாங்கன்னு முணுமுணுக்கிறாங்க.அசெம்பிளி தேர்தலில் ஆறு தொகுதிகளிலுமே தோல்விக்கு காரணமானவர்கள் பற்றி, பாதிக்கப்பட்டவர்கள், குமுறுறாங்க. மறுபடியும் அந்த மாதிரி தவறு நடக்க கூடாதுன்னு பேசி தீர்த்துக்கணுமே தவிர, மீடியாக்களுக்கு தகவல் கொடுப்பது யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை ஒதுக்கி வைக்க வேணும், என்று மாவட்ட தலைவரு வேணுகோபால் உத்தரவு போட்டார்.ஆனால், நேற்று முன்தினம் நடந்த மாவட்ட உயர் மட்ட கமிட்டிக் கூட்டத்தில், நடந்த முழு விபரமும் முடிவதற்குள்ளாகவே மீடியாவுக்கு போய் சேர்ந்திருக்கு.முக்கிய அம்சமாக லோக்சபா தேர்தலில் போட்டியிட மூன்று பேர் சீட் கேட்பது; அசெம்பிளி தேர்தலில் மாலுாரில் மாற்றுக் கட்சியுடன் குலாவி, பா.ஜ.,வை தோற்கடித்தவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றணும் என்று தோல்வி அடைந்த மஞ்சுநாத் கவுடா சத்தம் போட்டதும், கை பக்கம் சாதகமாக இருந்தவர்கள் எதிர்த்த தகவல்;பங்கார்பேட்டை தொகுதியில் போராடி சீட் வாங்கினவர், பிரசார இறுதி கட்டத்தில், மாயமானது, கட்சிக்கு அவமானமுன்னு பேசிய விஷயங்கள் எல்லாம் எப்படி வெளியே போச்சுன்னு மண்டையை பிய்ச்சுக்குறாங்க. யார் மீது எப்படி ஆக் ஷன் எடுக்க போறாங்களோ?
3 hour(s) ago | 10