உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஜூலை 3 வரை நீட்டிப்பு

கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஜூலை 3 வரை நீட்டிப்பு

புதுடில்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக மார்ச் 21ம் தேதி டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கொள்கையை வடிவமைப்பதிலும், லைசென்ஸ் வழங்க லஞ்சம் பெற்றதிலும் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த பணத்தை பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல்களில் ஆம் ஆத்மி பயன்படுத்தியது எனவும் குற்றம்சாட்டியது. ஆனால், இதனை ஆம் ஆத்மி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்சிங் மூலம் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Azar Mufeen
ஜூன் 19, 2024 22:00

இவரை வெளியே விட்டால் பிஜேபி கவுன்சிலர்கள் செய்த 6000 கோடி ஊழல் வெளியே வந்திரும்


ThamizhMagan
ஜூன் 19, 2024 18:11

அமலாக்கத்துறை கெஜ்ரிவால் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்து விட்டதா, இல்லை இன்னும் விசாரணைக்காக நீதிமன்ற காவலை நீடிக்கச் சொல்கிறதா? எந்த செய்தியும் இதை தெளிவு படுத்தமாட்டேங்கிறதே ? குற்றச்சாட்டு தாக்கல் செய்யும் வரை ஒரு வன்முறையற்ற அரசாங்க அதிகாரியை இஷ்டப்படி காவலில் வைக்க முடியாதே?


naranan
ஜூன் 19, 2024 16:38

பலப்பல ஆண்டுகள் சிறையிலேயே தங்கி இருக்க வாழ்த்துகள். புது டில்லியில் அடுத்து வரப் போவது பாஜக ஆட்சி தான்.


rsudarsan lic
ஜூன் 19, 2024 16:08

நிறைய டைம் இருக்கு புதுப்புது கதை எழுத . கடலை சாப்பிடுகிறேன் என்று உதார் விட


Palanisamy Sekar
ஜூன் 19, 2024 15:44

டெல்லியில் ஒரு செந்தில் பாலாஜி போல. அடுத்த ஆண்டில் ஒருவருட கொண்டாட்டத்துக்கு பாஜக ஏற்படாது செய்திடனும். மறந்திட கூடாது.


Indhuindian
ஜூன் 19, 2024 15:29

விடாது கருப்பு. அவருக்கே வெளியிலே வர இஷ்டம் இல்லை வெளியிலே வந்த டெல்லி தண்ணி கஷ்த்ததை எப்படி சமாளிக்கிறது மோடி பேர்ல பஷி போடறது டீ வி யில சும்மா சப்ப கட்டு கற்றதெல்லாம் அந்த மந்திரி அஷிதியே சமாளிக்கட்டும் அதோட இல்லம்மா இப்போ போயி ஹோஸ் பைப்பை தூக்கிட்டு வூட்டுக்கு தண்ணி புடிக்க முடியாது


ஆரூர் ரங்
ஜூன் 19, 2024 15:27

இலாகா இல்லாத முதல்வர் வெளியே இருந்தா என்ன உள்ளே இருந்தா என்ன?. ஆளை வைத்து ஆட்டையப் போடும் கும்பல் எங்கிருந்தாலும் திருடும்.


ES
ஜூன் 19, 2024 15:55

Yeah others are saints right


மேலும் செய்திகள்









புதிய வீடியோ