உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு

ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு

புதுடில்லி: பண மோசடி வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு, ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூன் 1 வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனிடையே, உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமினை 7 ம் தேதி வரை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கமான ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தி இருந்தது.இதன்படி, டில்லி ரோஸ் அவென்யூ., நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று இந்த மனுவை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 1க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

M Ramachandran
மே 30, 2024 19:28

வடிவேலு காமடி ஞ்யாபகத்திற்கு வருது எல்லா மீன் மார்க்கெட்டில் தெற்காசியாச்சியய் ஜா மீன் மட்டும் கிடைக்களே


J.V. Iyer
மே 30, 2024 17:21

துடைப்பக்கட்டைக்கு ஜா, ஜா, சிறைக்கு ஜா என்று தான் சொல்லவேண்டும்.


vijay
மே 30, 2024 16:42

போட்டோவில் அண்ணன் கெஜ்ரிவால் ஒரு விரலை காட்டி கேட்பது என்னவென்றால், ஒரே ஒரு முறை என்னை பிரதமரா ஆக்குங்கள், காலி.....ன் என்ற நாட்டை உருவாக்கி அவர்களுக்கு நல்வாழ்வு கொடுப்பேன், எல்லா மக்களுக்கும் பிஜ்லி,அதாங்க மின்சாரம் free, காஸ் free, அப்புறம் போன் ரீசார்ஜ் free, தண்ணீர் free, பஸ் free, ராஹுல் திட்டப்படி எல்லா ஏழை பெண்களுக்கும், அது உத்தேசமா ஒரு ஐந்து கோடி பெண்களுக்கு வருஷம் ஒரு லட்சம் free, கடன்கள் எல்லாம் பிரீ, அதான் ரத்து. அப்புறம் என்ன நாட்டை போண்டியாக்கி திருவோடு எந்த வச்சிடுவேன், ப்ளீஸ் எனக்கு ஒரு முறை பிரதமர் ஆகா வாய்ப்பு தாருங்கள்


SIVAN
மே 30, 2024 16:38

வாய் கிழிய பேசும் கெஜ்ரிவால் ஏன் கோர்ட்டு குறித்த நேரத்தில் திரும்பி செல்ல மனமில்லை. கோர்ட்டில் ஒத்துக்கொண்டுதானே வெளியில் வந்தாய். திரும்பி செல்ல வில்லை என்றால் ஏதோ திருட்டு வேலை நடப்பதாகத்தான் அர்த்தம். நீ ஆம் ஆத்மி இல்லை, chor ஆத்மி.


Kumar Kumzi
மே 30, 2024 16:14

நாகரீகமான திருடன்


Venkatasubramanian krishnamurthy
மே 30, 2024 14:13

தற்கால பிணையில் வெளியில் வந்ததிலிருந்தே கேஜ்ரிவால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். நல்ல நிலையில் இருந்த அவருக்கு பரப்புரைகள் முடிந்த நிலையில் உடல்நிலையைக் காரணம் காட்டி பிணை கேட்பது சிறையை நினைத்து வந்த நோயாக இருக்கலாம். நீதிமன்றம் அளித்த அவகாசம் முடிந்து பழக்கமான சிறைக்குச் சென்றுவிட்டால் உடல்நலம் சரியாகக் கூடும். உள்ளே செல்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்கவும் கரப்ஷன் கேஜ்ரிவால் ஜி.


Kannan Sethu
மே 30, 2024 13:52

டெக்னிக்கல் திருடன் .மடிக்கணினி கைப்பேசி யில் கடவுச்சொல்லை எடுக்க முடியாதவையாக உள்ளது. திறந்தால் குஞ்சு பொறிக்கும்


Kasimani Baskaran
மே 30, 2024 13:48

ஜாமீன் தவிர அணைத்து மீனும் கிடைக்கும்.


vadivelu
மே 30, 2024 13:48

பாவம் கொடுத்துடுங்க எசமான், சோலா லட்சம் கோடி ஊழல் என்பது. எப்படி என்ன பெரிய ஊழல். ஒரு வாரம் போதும், இன்னும் பல லட்சம் கோடி ..


அசோகன்
மே 30, 2024 13:41

இப்படிப்பட்ட திருடர் கூட்டம் புள்ளி கூட்டணி ஆட்சிக்கு வந்தால்... ஊழலை சட்டபபூர்வமாக்கி விடுவார்கள்..... அப்புறம் என்ன ஒரே கொள்ளை கொலைதான் ???


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ