உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் நாளை ராஜினாமா : அடுத்த முதல்வர் யார் ?

கெஜ்ரிவால் நாளை ராஜினாமா : அடுத்த முதல்வர் யார் ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (செப்.17) முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், மாலை துணை நிலை கவர்னரிடம் கடிதம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. டில்லியில், 2021 - 2022ம் ஆண்டுக்கான மதுபான கொள்கை திருத்தப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து, அந்த கொள்கை கைவிடப்பட்டது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.இதே வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச்சில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சமீபத்தில் கெஜ்ரிவால் 'முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக் கூடாது. துணை நிலை கவர்னர் ஒப்புதல் தேவைப்படாத ஆவணங்களில் கையெழுத்திடக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நேற்று திடீரென அறிவிப்பு வெளியிட்டார்.இதை தொடர்ந்து இன்று வெளியான அறிவிப்பில், முதல்வர் பதவியை கெஜ்ரிவால் நாளை (செப்.17) ராஜினாமா செய்ய உள்ளார். அன்று காலை 11 மணிக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கெஜ்ரிவால் தலைமையில் நடக்கிறது. இதில் முதல்வர் யார் என அறிவிக்கப்பட உள்ளது. பின்னர் 4:30 மணியளவில் துணை நிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

nagendhiran
செப் 16, 2024 20:15

இது நடிப்பு? இனி டில்லி மக்கள் இவனை நம்ப மாட்டாங்க?


Sivagiri
செப் 16, 2024 19:34

ரைட்டு , , தாயம் ஒன்னு விழுது - ஏற்கனவே காஷ்மீர் , அப்பறம் சோரன் , அப்புறம் பட்நாயக் , அப்பறம் , ஆந்திர ரெட்டி , அடுத்து மமதாவா , ? , தீய சக்திகள் வலிமை கம்மியா ஆயிட்டு வருது , , கடைசியா ? ?


S. Gopalakrishnan
செப் 16, 2024 19:00

வேறு யார் ? இன்னொரு ராப்ரி தேவி தான் !


Barakat Ali
செப் 16, 2024 18:57

தேர்தலிலும் வென்று ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் ... நாம்தான் முதல்வராவோம் என்கிற நம்பிக்கை இந்த துக்கடா துக்கடா ஹோ ஜாய் தலீவனுக்கு ....


Duruvesan
செப் 16, 2024 18:56

மாசம் 8500 குடுப்பேன்னு சொல்லு, ஓட்டு பிச்சிக்கும், அப்புறம் நீ எப்பவும் போல ஊழல் பண்ணலாம், கோர்ட் உனக்கு வாழ்நாள் பெயில் குடுத்திடும்


Palanisamy Sekar
செப் 16, 2024 18:48

குற்றவாளி என்பதால்தான் ஜாமீனில் இப்படி ஒரு நிபந்தனையை விதித்துள்ளார் நீதிபதிகள். தார்மீக அடிப்ப்டையில் பதவி விலகியே ஆகணும் என்பதால்தான் இந்த முடிவு. திட்டமிட்டபடி தனது மனைவியையே பரிந்துரைப்பார்.இதில் சந்தேகமே இருக்காது. அல்லது டம்மி பீஸ் ஏதாவது ஒன்றை நியமித்து ஆட்டுவிப்பார். ஆளுநர் ஜனாதிபதிக்கு இந்த அரசை கலைக்க சொல்லி பரிந்துரை செய்திடலாம். இல்லையேல் ஊழலில் தாண்டவமாடும் கேஜிரியின் அரசு. தலைநகரை அசிங்கம் செய்திடும் அரசு கெஜ்ரிவாலின் அரசு.


ஆரூர் ரங்
செப் 16, 2024 18:38

முன் சீட்டிலிருந்து வண்டியை இயக்கியவர் இப்போ பொறுப்பற்ற பின்னிருந்து இயக்கப் போகிறார். ஆனா வழக்கம் போல ஊழல் முன்னிலையில்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை