உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

கெஜ்ரிவால் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் கைவிரித்து விட்டது. மதுபான முறைகேட்டு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார் . இது தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் செயல் என்றும், பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டு இடைக்கால ஜாமின் பெற்றார். தேர்தல் முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி, மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையில் ஜூன் 4 ம்தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது. ஜூன் 7 வரை ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார். ' சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் 7 கிலோ எடை குறைந்து விட்டதாகவும், மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகள் எடுக்க வேண்டியுள்ளதாகவும், உடல் நலத்தை காரணம் காட்டி' ஜாமின் நீட்டிப்பு கேட்டுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்க முடியாது. தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என விசாரித்த நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

s chandrasekar
மே 28, 2024 21:29

குட் comment.


venkatakrishna
மே 28, 2024 20:59

எப்படி இடி மற்றும் சிபிஐ யையிடம் இத்தனைவருஷமாக கண்ணில் படாமல் பல கோடிகள் சம்பாதிக்கும் திறமை கேஜ்ரிவாலுக்கே சாரும். மற்ற மாகாண கட்சிகள் இவரிடம் பயிர்ச்சி எடுக்க வேண்டும்.


Ramesh Sargam
மே 28, 2024 20:41

சூப்பர். ஸ்வீட் எடு, கொண்டாடு.


Ganesan Krish
மே 28, 2024 19:11

உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவலுக்கு பெயில் கொடுத்ததே தவறானது... தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு இதற்கு முன்னர் இது போன்ற காரணத்திற்காக பெயில் கொடுக்கப்பட்டிருக்கா.. இது உச்ச நீதிமன்றத்தின் தவறான முன் உதாரணம்..


RAVINDIRAN B
மே 28, 2024 15:45

பாவம் பாத்த இப்படித்தான்


Anand
மே 28, 2024 15:14

இவனை போன்றவர்களை பாதுகாக்க தான் சுப்ரீம் கோர்ட் உள்ளது போல.


Seenu Krishnamurthy
மே 28, 2024 15:11

please appeal to cji he will take care.


GMM
மே 28, 2024 14:53

அவசர மனுவாக விசாரிக்க முடியாது. ஆனால், தலைமை நீதிபதி உரிய முடிவு எடுப்பார். கெஜ்ரிவாலுக்கு ஏன் மன்றத்தில் இவ்வளவு முக்கியத்துவம்? பயமா, பணமா, பாசமா. முடிவு செய்ய முடியவில்லை என்றால், தலைமை நீதிபதி நேரடியாக விசாரிக்க வேண்டி இருக்கலாம். இதனால், ஜாமீன் கெஜ்ரிவாலுக்கு எவ்வளவு செலவு ஆகி இருக்கும்.


Sridhar
மே 28, 2024 14:33

ஏன் திடீரென்று கோபம்? பேரம் படியவில்லையோ? பாவமய்யா, அந்த ஆளுக்கு ஒன்னு இல்ல ரெண்டு இல்ல ஏழு கிலோ குறைஞ்சிடுச்சாம் எழுந்திரிச்சு நடக்கவே முடியாத நிலையில இருக்குறாரு எதோ கூட குறைவா இருந்தாலும் பாத்து போட்டு செய்யுங்க பாஸ்


vijay
மே 28, 2024 14:29

ஊழல்வாதிகள், பொய்யர்கள் எல்லாரையும் மிஞ்சும் ஓர் கேவலமான அரசியல்வாதி இவர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை