உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., உத்தரவின்படி செயல்படுவதா? கேரள கவர்னர் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!

பா.ஜ., உத்தரவின்படி செயல்படுவதா? கேரள கவர்னர் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'மத்தியில் ஆளும் பா.ஜ., உத்தரவின்படி, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். அவருக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டாலும் எங்களின் போராட்டம் தொடரும்' என, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., தெரிவித்துள்ளது.கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுங்கட்சி சார்பிலும், அந்த கட்சியின் மாணவர் அமைப்பினர் சார்பிலும் தொடர்ந்து கருப்புக்கொடி காட்டுவது உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, கொல்லம் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் சென்ற கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு, நிலமேல் என்ற இடத்தில், ஆளும் மார்க்.கம்யூ., கட்சியின் ஆதரவு பெற்ற, எஸ்.எப்.ஐ., எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கோபமடைந்த அவர், காரில் இருந்து கீழே இறங்கி தர்ணாவில் ஈடுபட்டார். இரு மணி நேரத்துக்கும் மேல் கவர்னர் ஆரிப் முகமது கான் தர்ணாவில் ஈடுபட்டது, பரபரப்பைஏற்படுத்தியது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம், ஆளும் மார்க்.கம்யூ., மாநில செயலர் எம்.வி.கோவிந்தன் நேற்று கூறியதாவது: மத்தியில் ஆளும் பா.ஜ., உத்தரவின்படி, கவர்னர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். தனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, கேரள அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை அவர் நிர்பந்தித்து வருகிறார்.கவர்னர் என்ன செய்தாலும், வரும் லோக்சபா தேர்தலில், கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ., வெற்றி பெறாது. கொல்லத்தில், எஸ்.எப்.ஐ., அமைப்பினரை நோக்கி கவர்னர் தான் சென்றார். ஆனால் தன்னைத் தாக்க முயன்றதாக, அவர் பொய் கூறுகிறார். எத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், கவர்னருக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

தாமரை மலர்கிறது
ஜன 29, 2024 21:23

கவர்னர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். கம்யூனிஸ்ட் பேச்சை கேட்கவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.


venugopal s
ஜன 29, 2024 11:32

மத்திய பாஜக அரசு ரௌடிகளை ஆளுநர்களாக நியமித்து சாதனை புரிந்துள்ளது .


தமிழ்வேள்
ஜன 29, 2024 13:18

ரவுடிகளை அமைச்சர்களாக , வாரிய தலைவர்களாக நியமித்து திராவிட கட்சிகள் முன்னோடிகளாக இருக்கின்றன .


lana
ஜன 29, 2024 11:20

இந்த மாணவர்கள் அமைப்புக்கு படிப்பு தவிர வேறு அனைத்துக்கும் நேரம் உண்டு. இப்படி பொது மக்களின் வரிப்பணம் இல் 40 வயது வரை படிப்பவன் எல்லாம் இந்த நாட்டிற்கு எதற்காக தேவை. இப்படி தான் டெல்லி J.N University இல் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்த மட்டுமே சிலர் படிக்கிறார்கள். இவர்கள் ஆல் நல்ல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்


Sampath Kumar
ஜன 29, 2024 09:17

ஆமாமாம் அதுக்கு என்ன இப்போ அவரு வாங்கின காசுக்கு கூவுவாரு அதை தான் இங்கேயும் ஒருத்தரு செய்கிறார் இந்த அரசியல் அமைப்பு சட்டம் என்ற ஓன்று இருப்பதாக இந்த ஆளுகளுக்கு தெரிய வில்லையா அல்லது தெரிந்தும் தெரியாது போல நடிக்கின்றவர்களை ஏன் ஏழுவு பிறவிகளோ இவர்கள்


VSaminathan
ஜன 29, 2024 08:41

எப்பனி திமுக தமிழகத்துக்கு சனியோ அதே போல பிணராயி மற்றும் கம்யூனிஸ்ட்கள் கேரளத்துக்கு பிடித்த சனி.


ராஜா
ஜன 29, 2024 08:18

கம்மிகள் எப்போதும் சீனாவின் உத்தரவை தட்டாதவர்கள்.


GMM
ஜன 29, 2024 08:02

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் பிஜேபிக்கு ஆதரவு என்று கவர்னர் பதவியில் அரசியல் கலக்க வேண்டாம். கவர்னருக்கு எதிரான போராட்டம் மக்கள், தேசத்திற்கு எதிரான போராட்டம். தங்க கடத்தல் கோஷ்டிகள் அரசியல் செய்து அச்சமின்றி வாழ்கின்றனர்.?


பேசும் தமிழன்
ஜன 29, 2024 07:42

மாநிலத்தில்... ஆளுநர் அவர்களுக்கே பாதுகாப்பில்லை எனும் போது... சாமானிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்... ஆளுநர் அவர்களை முற்றுகை போராட்டம் நடத்தினார்கள் என்றால்... போராட்டம் நடத்திய கும்பலை அடித்து விரட்டாதது ஏன் ??? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ???


Svs Yaadum oore
ஜன 29, 2024 07:10

கேரளாவிலிருந்து வளைகுடா செல்லும் தீவிரவாதிகள் அதிகம்.. அதை கேள்வி கேட்க கூடாதாம்... இவனுங்க மாநிலத்து மருத்துவ கழிவை அடுத்த மாநிலத்தில் கொட்டுவார்கள்.. ஆனால் இவர்கள் மட்டும் இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களும் வேலை தேடி செல்வார்கள் ....


Duruvesan
ஜன 29, 2024 07:09

காங்கிரஸ் sweep பண்ணும், கம்மிஸ் ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டானுங்க


சமீபத்திய செய்தி