உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?

ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரளாவின் பாலக்காட்டில் உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா, 38. இவர், மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அங்கு ஒரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. நிமிஷாவுக்கு, ஏமனில் இன்று நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனையை, அந்நாட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவருக்கு இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஒர் சிறப்பு அலசல்!நிமிஷா பிரியாவின் 17 வருட ஏமன் வாழ்க்கை விபரம் பின்வருமாறு:2008ம் ஆண்டு: 20 வயது நிரம்பிய நிமிஷா பிரியா, நர்சாக வேலை செய்வதற்காக, ஏமனிற்கு குடிபெயர்ந்தார்.2011ம் ஆண்டு: ஏமனில் நடந்த உள்நாட்டு மோதல் நிமிஷா பிரியாவிற்கு தலைவலியை ஏற்படுத்தியது. அவர் ஒரு மலையாளியைத் திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவரது கணவரும் மகளும் பின்னர் நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவுக்குத் திரும்பினர்.2015ம் ஆண்டு: உள்நாட்டுப் போரால் நிலையை மாறியது.2014ம் ஆண்டின் இறுதியில், ஹவுத்தி கிளர்ச்சிக் குழு தலைநகரை கைப்பற்றியது. 2015ம் ஆண்டு அவர்கள் அரசாங்கத்தையும் கைப்பற்றினர்.2015ம் ஆண்டு தான் நிமிஷா பிரியா, உள்ளூர் விதிகளின்படி, உள்ளூர் தொழிலதிபர் தலால் அப்தோ மெஹ்தியுடன் இணைந்து, சனாவில் ஒரு மருத்துவமனையைத் திறந்தார். (தொழில் தொடங்க வேண்டும் எனில், அந்நாட்டை சேர்ந்த ஒருவர் பங்குதாரராக இருக்க வேண்டும்)2016ம் ஆண்டு: வணிக கூட்டாளியாக இருந்த மெஹ்தி, அவரை அச்சுறுத்தி பணிய வைக்க முயற்சித்தார். இந்நிலையில், தன் ஆவணங்களை பறிமுதல் செய்ததாக கூட்டாளி மீது நிமிஷா பிரியா புகார் அளித்தார். ஆனால் அவருக்கு போலீஸ் உதவி கிடைக்கவில்லை.2017ம் ஆண்டு: மயக்க மருந்து தவறாகிவிட்டது. மெஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்டெடுக்க பிரியா முயன்றார், ஆனால் அவர் 'டோஸ்' அதிகமானதால் மெஹ்தி இறந்துவிட்டார். 2018ம் ஆண்டு: விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் நிமிதாவுக்கு மரண தண்டனை விதித்தது.உள்ளூர் விசாரணை நீதிமன்றத்தால் அவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு போதுமான சட்ட உதவி கிடைக்கவில்லை.2020ம் ஆண்டு: நிமிஷா பிரியாவை காப்பாற்ற குழு உருவாக்கப்பட்டது.அவரது மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அதே நேரத்தில், சில குடிமக்களும் மலையாள இந்திய புலம்பெயர்ந்தோரும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்க ' சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில் ' ஒன்றை உருவாக்கினர்.2023ம் ஆண்டு: நீதிமன்றம் முக்கிய முடிவுமரண தண்டனைக்கு எதிரான நிமிஷா பிரியாவின் இறுதி மேல்முறையீட்டை ஏமனின் உச்ச நீதித்துறை கவுன்சில் தள்ளுபடி செய்தது.2024ம் ஆண்டு: நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேச்சு நடத்தினர். ஆனால் முடிவு ஏற்படவில்லை.2025ம் ஆண்டு (ஜூலை 16ம் தேதி நிலவரப்படி): அவரது மரணதண்டனை முதலில் ஜூலை 16ம் தேதி திட்டமிடப்பட்டது, ஆனால் ராஜதந்திர மற்றும் மத தலையீடுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

RK
ஜூலை 17, 2025 05:25

பாஸ்போர்ட் கொடுக்காமல் உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தன் வருமானத்தை பிடுங்கி தின்ற பன்றிக்கு கேரளா நர்ஸ் கொடுத்த மயக்க மருந்து அதிகமாகி இறந்து விட்டான். பன்றிகளுக்கு மூளை இல்லை நீதி நியாயம் இல்லை. காட்டு அரபிகளின் கையில் சிக்காதீர்கள் மக்களே....


Kannan Chandran
ஜூலை 16, 2025 22:22

நர்சிங் மட்டும் படித்துவிட்டு கிளினிக் வைத்தபோதே தெரிகிறது அந்த பெண் நிறைய குறுக்குவழிகளை கையாண்டு இருக்கிறார், குறிப்பாக கொன்ற பின் துண்டு துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் அமுக்கி வைத்தது..


KRISHNAN R
ஜூலை 16, 2025 20:55

வெளிநாட்டு நிறுவனங்கள் ஏஜன்சிகள் செய்யும் விஷயம் நமக்கு தெரிவதில்லை


மனிதன்
ஜூலை 16, 2025 20:55

இதில் ராஜ தந்திரமொன்றுமில்லை, இது நம் கேரளா இஸ்லாமிய மதபோதகர் அவர்களால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது...இந்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்திவிட்டு முஸ்லியார் முயற்சி செய்தார், தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது...இதற்கிடையில் அவருக்கு அந்த பெருமை போய் சேரக்கூடாதென்று சில புல்லுருவிகள் செய்யும் செயல், நிமிஷா வின் தண்டனை நிறைவேற்ற வழி வகுக்கும் அபாயம் உள்ளது...


தமிழ்வேள்
ஜூலை 16, 2025 20:27

இஸ்லாமிய நாடுகளில் இன்னும் மனித அடிமை முறை காட்டுமிராண்டி நடத்தைகளை மதத்தின் பெயரால் ஆதரித்து முட்டு கொடுத்தல் அதிகம் உள்ளது... இந்த பிரச்சினையை தவிர்க்க இஸ்லாமிய நாடுகளில் வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்..காசு கிடைக்கிறது என்பதற்காக காட்டுப் பயல்களோடு மாரடிக்க வேண்டுமா என்ன?


Ganapathy
ஜூலை 16, 2025 20:54

இஸ்லாமிய நாடுகள் காட்டுமிராண்டித்தனமான மூளையற்ற மதச்சார்பற்ற சோசலிஸத்தை பின்பற்றவில்லை. அறிவீலித்தமாக ஒரு கொலைகாரியை வச்சு முஸ்லீம் நாடுகளில் வாழும் இந்தியர்களின் வாழ்வை உலைவைக்கும் விதமாக இன மத வெறுப்பை பரப்ப வேண்டாம்.


Indian
ஜூலை 16, 2025 21:56

அடேய் அறிவாளி .அந்த ஈனப்பயல் ஒரு பெண்ணிடம் செய்த காரியம் சரியா ??. இந்த பெண் போலீஸ் இல் புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை இல்லை ....


Ganapathy
ஜூலை 17, 2025 10:02

நியாயப்படுத்த புளுகாதே.


Ganapathy
ஜூலை 16, 2025 20:24

உள்ளூர்காரனுடன் பலகாலமாக பழகி தனது கேரள வீட்டும் அழைத்துப் போய் காட்டி விருந்தோம்பல் செய்து அவனுடன் பிஸினஸ் செய்ய ஒப்பந்தம் போட்டு பிறகு போதைமருந்து கொடுத்து கொலை செய்து உடலை அறுத்து தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கும் அளவுக்கு துணிந்து திட்டம் போட்டு கொலை செய்த இவளுக்கு பெண் என்றோ இந்தியன் என்றோ கருணை காட்டக்கூடாது. நமது வரியை இவள் விடுதலைக்கு செலவு செய்யக்கூடாது. இப்படிப்பட்ட செயலை ஒரு வெளிநாட்டு குடிமகனாக முஸ்லீம் தேசத்தில் செய்வது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்..


Indian
ஜூலை 16, 2025 22:04

உன்னிடம் யாரும் கருத்து கேட்க வில்லை . நீ மட்டும் தான் இந்தியா வில் வரி செலுத்துகிறாயா ??


Rajan A
ஜூலை 16, 2025 20:24

குற்றம் செய்தாரா, இல்லையா? அதுதான் முதற் கேள்வி. குற்றம் செய்தார் என்றால் எதற்காக காப்பாற்ற வேண்டும்?


நசீர்
ஜூலை 16, 2025 20:03

இந்தியரை வெளிநாட்டு பெண் கொலை செய்தால் விட்டு விடுவீர்களா ?


Ramesh Sargam
ஜூலை 16, 2025 19:34

பணத்துக்கு ஆசைப்பட்டுக்கொண்டு இப்படி வெளிநாடுகளில் சிக்கி இந்தியர்கள் பலர் மிகவும் அவதிப்படுகின்றனர். என்னதான் இருந்தாலும் கொலை செய்யும் அளவுக்கு செல்லக்கூடாது.


SANKAR
ஜூலை 16, 2025 20:07

kolai seyya ennamillai.passport pathi complaint koduthum palanillai.she can not get out.anga kaatumiraandi aatchi.our Centre itself say " that country is different"...aval thalavithi.Yemenukku poi irukka koodaathu..all other countries ok.


Ganapathy
ஜூலை 16, 2025 20:31

சங்கரா நீங்க மொதல்ல தமிழ்ல எழுதுங்க. ஒரு எழவும் புரியல.


nagendhiran
ஜூலை 16, 2025 19:06

கொலை செய்தால் விடுவாங்களா என்ன?