உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா ஸ்டைல் கோதுமை ஆப்பம்

கேரளா ஸ்டைல் கோதுமை ஆப்பம்

டிபன் என்றாலே தோசை, இட்லி என அரைத்த மாவையே அரைப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக கோதுமை மாவை அரைத்து, 'கோதுமை மாவு ஆப்பம்' செய்து சாப்பிட்டு பார்க்கலாமா? சுவையில் மெய் மறந்து போவீர்.பெரும்பாலும் வீட்டில் உள்ள குட்டீஸ்கள், புதுமையாக ஏதாவது சாப்பிட செய்து கொடுக்கும்படி, அம்மாவிடம் அடம்பிடிப்பர். ஆனால், இருக்கும் வேலை சுமையில், தாய்மார்கள் புதிய வகை உணவுகளை செய்து கொடுக்க சிரமப்படுவர். இனி அந்த கவலை வேண்டாம். எளிய முறையில், கேரளா ஸ்டைலில் சத்தான கோதுமை மாவு ஆப்பம் செய்யலாம்.செய்முறை:பெரிய அளவிலான பாத்திரத்தில், ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும். அதில், அரிசி மாவு, ஈஸ்ட் சேர்த்து நன்கு கலக்கவும். பின், தேங்காய் துருவல், வடித்த சாதம், நாட்டு சர்க்கரை, உப்பு, அவல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு லேசாக கலக்கவும். இப்போது, இந்த கலவையில், மிதமான அளவில் சுடுதண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்ற பக்குவம் வரும் வரை கலக்கவும்.இந்த கலவையை மிக்சியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, ஆப்பம் சுடும் பக்குவத்திற்கு வரும் வரை நன்கு அரைக்கவும். பின், அந்த கலவையை பாத்திரத்திற்கு மாற்றவும். அவ்வளவு தான், கலவை தயார் ஆகிவிட்டது.ஒரு பெரிய தேங்காயை உடைத்து கொள்ளவும். தேங்காயை நன்கு துருவிக் கொள்ளவும். துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைக்கும்போது, ஏலக்காய் சேர்த்து கொள்ளவும். அப்போது தான் மணமும், சுவையும் கிடைக்கும். நன்கு அரைத்த பின், ஆப்பத்துக்கு தொட்டுக்க சுவையான தேங்காய் பால் தயார் ஆகிவிடும்.பின், மாவு கலவையை எடுத்து, ஒரு கரண்டி மாவை, தோசைக்கல்லில் ஊற்றி ஒரு மூடியால் மூடவும். இப்படியே ஆப்பத்தை சுட்டு தள்ள வேண்டியது தான். தயாராகிய கேரளா ஸ்டைல் கோதுமை மாவு ஆப்பத்தில், தேங்காய் பாலை ஊற்றி, நன்கு ஊற வைத்து சாப்பிட்டு மகிழலாம்.தேவையான பொருட்கள்:கோதுமை மாவு... 1 கப்அரிசி மாவு... 2 டீஸ்பூன்ஈஸ்ட்... ஒன்றரை டீஸ்பூன்தேங்காய் துருவல்... 1 கப்வடித்த சாதம்... 1 கப்நாட்டு சர்க்கரை... ஒன்றரை டீஸ்பூன்உப்பு... கால் டீஸ்பூன்அவல்... அரை கப்ஏலக்காய்... 3முழு தேங்காய்... 1


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை