உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா கும்பமேளாவுக்கு காலிஸ்தானி பயங்கரவாதி மிரட்டல்

மஹா கும்பமேளாவுக்கு காலிஸ்தானி பயங்கரவாதி மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் நடக்கும் மஹா கும்பமேளாவுக்கு காலிஸ்தானி பயங்கரவாதி மிரட்டல் விடுத்த நிலையில், இதுபோன்ற பல பைத்தியங்களை பார்த்து விட்டதாக ஹிந்து அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த டிச.,23ம் தேதி பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் காவல்நிலையத்தில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தி காலிஸ்தானி பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மஹா கும்ப மேளா நிகழ்ச்சிக்கு, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளான். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மஹா கும்ப மேளாவை சீர்குலைக்க, சாதி பிரிவினைவாதத்தை குர்பத்வந்த் சிங் பன்னுன் தூண்டி விட முயற்சிப்பதாக அகில பாரதிய அஹாதா பரிஷத் அமைப்பின் தலைவர் மஹாந்த் ரவீந்திர புரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'பன்னுன் எங்களின் மஹா கும்ப மேளாவில் நுழைந்தால் அடித்து விரட்டி அடிப்போம். இது போன்ற பல பைத்தியங்களை பார்த்து விட்டோம். சீக்கியர்கள், ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் கொண்டாடும் நிகழ்ச்சி இது. பன்னுனின் பிரிவினைவாத முயற்சி தேவையற்றது. சனாதன பாரம்பரியத்தை சீக்கிய சமூகத்தினர் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் சனாதன தர்மத்தின் பாதுகாவலர்கள். எனவே, இதுபோன்ற மிரட்டல்களை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்', எனக் கூறினார். ஜன.,14ல் மகர சங்கராந்தியும், ஜன.,29ல் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசையும், பிப்.,3ல் பசந்த் பஞ்சமியும் கொண்டாட இருப்பதால், இந்த நாட்களில் லட்சணக்கணக்கான மக்கள் புனித நீராட இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sankaranarayanan
டிச 26, 2024 18:22

அமெரிக்க புதிய ஜனாதிபதி டிரம்பு வந்தவுடன் மோடி அவர்கள் பேசி இந்த பண்ணுவை பந்தாடவேண்டும் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தி அவனை இங்கு கொண்டு வந்து கூண்டில் ஏற்றி உரிய தண்டனையை வழங்கிடவேண்டும் அவன் அமெரிக்காவில் இருப்பது அவர்களுக்கே ஆபத்து


வாய்மையே வெல்லும்
டிச 26, 2024 12:52

வெளிநாட்டில் இருந்து எலும்பு துண்டு கூவுது. இவனை யாரு இயக்குகிறார்கள் என கண்டறிந்து.. இருவரையும் சங்கறுக்கவேனும்


Gopal
டிச 26, 2024 12:46

கண்ட நாய்களையும் கண்டு பயப்பட கூடாது. நாயை கண்டால் அடித்து விரட்டி அடிக்க வேண்டும்.


ராமகிருஷ்ணன்
டிச 26, 2024 11:19

கும்பமேளாவில் மகா காளி பூஜை இருந்தால் பலி கொடுக்க ஆள்கள் ரெடி தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் கண்டவன் எல்லாம் இந்துகளை மிரட்ட மாட்டான்.


nagendhiran
டிச 26, 2024 11:12

அப்படிதான் செய்யுங்க?


Mohan D
டிச 26, 2024 09:57

இருடி இன்னும் 25 நாளுக்கு அப்பறோம் எப்படி உன்ன தூக்கப் போறாங்கன்னு பாரு ....டிரம்ப் அரசாங்கம் இதை செய்யணும் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 08:49

பெட்டை மாதிரி ஒளிஞ்சுக்கிட்டு மிரட்டுறவனுக்கு இவ்ளோ அதுப்பா ????


sundarsvpr
டிச 26, 2024 08:40

ஹிந்துக்கள் மத பற்றுதல் உடையவர்கள். பிற மதத்தை தூசிப்பர் அல்ல. ஹிந்து மதத்திலிருந்து புத்த ஜைன சீக்கிய மதங்கள் தோன்றின. கொள்கை வேறுபாடுதான். வன்முறையை உபயோக்கியவில்லை. ஆனால் வெளிநாட்டு முகலாம் இங்கிலாந்து பாரதத்தில் மத துவேத்தில் நாட்டின் ஒற்றுமையை குலைத்தனர் .. இனிமேல் பாரத மதங்கள் ஒற்றுமையாய் இருந்து மத வெறியர்களை தயவு சாட்சண்யம் பாராமல் விரட்டியடிக்கவேண்டும். இவர்களைவிட மதம் மாறியவர்களின் பல அரசியில் கட்சி நபர்கள் திரைநடிகர்கள் ஹிந்து பெயரை வைத்துக்கொண்டு மறைமுக பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் நம்பிக்கை அற்றவர்கள்


Rajan
டிச 26, 2024 08:39

இச்தியாவும் அமெரிக்கா மாதிரி இவனைப் பிடித்து கொடுத்தால் இவ்வளவு விலையென்று அறிவிக்கவேண்டும்


visu
டிச 26, 2024 08:22

உண்மையிலேயே இவன் பைத்தியம்தான் .சொல்லிய எதையும் செய்ததில்லை அமெரிக்காவும் ஏன் இப்படி வெளிப்படையா மிரட்டல் விடுக்கும் ஒருவனுக்கு ஆதரவு அளிக்குது தெரியவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை