உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி வாங்கடா பாத்துக்கலாம்; மருத்துவமனை பெண் ஊழியர்களுக்கு கராத்தே, களரிப்பயிற்சி

இனி வாங்கடா பாத்துக்கலாம்; மருத்துவமனை பெண் ஊழியர்களுக்கு கராத்தே, களரிப்பயிற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: பாலியல் பலாத்கார அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கொச்சி மருத்துவமனையில் பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தற்காப்பு கலை பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மாநில அரசின் பொறுப்பு தான் என நீதிமன்றமும் திட்டவட்டமாக தெரிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7m7a9k6u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ரூ.50 லட்சம்

இந்நிலையில்,கொச்சி மருத்துவமனையில் பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அனைத்து பெண் ஊழியர்களுக்கும் தற்காப்பு கலை பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

50,000 பெண்களுக்கு பயிற்சி

இந்த பயிற்சித் திட்டம் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும். கராத்தே, குங்பூ, களரிச்சண்டை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த பயிற்சிகள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு ஆதரவுடன் நடத்தப்படும். தற்காப்புக் கலைப் பயிற்சி அவர்களின் உடல் தற்காப்பு திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மன வலிமையையும் அதிகரிக்கும். 50,000 பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாலியல் கல்வி வகுப்பு

தற்காப்புக் கலைப் பயிற்சித் திட்டத்துடன், மருத்துவமனை ஊழியர் அல்லாத பெண்களுக்கும் பாதுகாப்புக் கருவிகள் விநியோகிக்கப்படும். சமூகத்திற்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலக் குழுக்கள் உட்பட பல்வேறு அரசு நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு பாலியல் கல்வி வகுப்புகளை மருத்துவமனை நடத்தும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

என்றும் இந்தியன்
ஆக 21, 2024 17:24

இன்றைய செய்தி "மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள பிவண்டி பகுதி : திருமணம் செய்ய மறுத்த காதலனின் அந்தரங்க உறுப்பை இளம்பெண் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது". நம்ம பெண்கள் already advanced stage ல் இருக்காங்க என்று இதனால் ருசு ஆகின்றது. இந்த பயிற்சி எல்லாம் அவ்வளவு அவசியம் இல்லை


Ram pollachi
ஆக 21, 2024 16:57

வல்லரசு நாடாக இருந்தால் துப்பாக்கி கிடைக்கும், வளரும் நாடாக இருந்தால் கத்தி, சோடாபாட்டில் தான்... போதைக்கு அடிமையாகி அகால வேளையில் வீட்டிக்கு வரும் பெண்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?


Just imagine
ஆக 21, 2024 14:58

பெண்கள் சிறிய டாலர் சைஸில் GPS கருவி அவர்கள் தம் செயினில் அல்லது வளையலில் அணிய வைக்கலாம் ...... அவர்கள் தங்களுக்கு ஆபத்தான சந்தர்ப்பத்தில் ON செய்து அருகாமையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனடியாக location தகவல் தரலாம் மற்றும் கருவி மிக பெரும் அபாய ஒலி எழுப்பி சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு Alert செய்யலாம் ..... மற்ற பிற நேரங்களில் GPS கருவியை OFF செய்து வைக்கலாம்.


Indian
ஆக 21, 2024 13:47

பெண்ணை மதிக்காத வீடும் , நாடும் முன்னேறப்போவதில்லை . பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை தேவை .


Azar Mufeen
ஆக 21, 2024 13:06

கற்பழிப்பு செய்தவனின் கண்களை நோண்டி எடுத்து விடுங்கள், முதுகெலும்பை உடைத்து விடுங்கள்


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 21, 2024 12:31

எல்லாத்தையும் அவங்க அவங்க பார்த்துகிட்டா, எதுக்கு போலீஸ், அரசாங்கம், தண்டத்துக்கு வரிப்பணம்? இந்த மாதிரி பண்ணுறவங்களுக்கு கைய வெட்டுறது, கால வெட்டுறதுனு சட்டம் கொண்டு வாங்க.


RAMAKRISHNAN NATESAN
ஆக 21, 2024 11:30

பெண் டாக்டருக்கும் நோயாளி இளைஞருக்கும் இடையே, அதே போல பெண் போலீசுக்கும் ரவுடிக்கும் இடையே, அதே போல பெண் டீச்சருக்கும் மக்கு மாணவருக்கும் இடையே காதல் மலருவது போல இப்போதெல்லாம் திரைக்கதை உருவாக்கப்படுகிறது ........


RAMAKRISHNAN NATESAN
ஆக 21, 2024 10:49

பொதுவாகப் பெண்கள் உடம்பில் வலு குறைந்தவர்களாக இருப்பார்கள் .... அப்படியிருப்பவர்கள் தற்காப்புக் கலை பயில்வதால் பயனில்லை ...... இரண்டும் முக்கியம் ......


TSRSethu
ஆக 21, 2024 10:34

கராத்தே பயிற்சியோடு ஒரு பிஸ்டல் கொடுத்து அதற்கான பயிற்சியும் கொடுப்பது நல்லது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை அரசுகளால் இதனை கட்டுப்படுத்த முடியாது. அவர்களுக்கு இந்த விஷயத்தில் அக்கரையும் இல்லை.


chennai sivakumar
ஆக 21, 2024 11:34

மிக சரி. பிஸ்டல் ஒன்றுதான் சரியான தீர்வு. எப்படி ஜேம்ஸ்பாண்ட் licensed to kill அதுபோல அதிகாரம் வழங்க வேண்டும். நாட்டின் ஜனத்தொகை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு போகும்போது இது போல நிகழ்வுகளை கட்டுபடுத்த துப்பாக்கி கலாச்சாரம் ஒன்று மட்டுமே தீர்வு


Mr Krish Tamilnadu
ஆக 21, 2024 10:28

நிறைய பெண்களின் உச்ச கோபத்தின் வெளிபாடு - நறுக்கி எறிய வேண்டும். இதற்கான தீர்வு என கேட்டால், அந்த பெண்கள் இதை தான் கூறுவார்கள். ஏன் என கேட்டால், மக்கள் தொகையும் குறையும். அவர்களின் ஆசை துளிர்த்து கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு இரைக்கு அவர்களுக்கு தண்டனை தருவதற்கு, இது ஒரே தண்டனை என்பார்கள். ஆண் மாடல் பொம்மை மூலம், இதற்கு ரகசியமாக பயிற்சி அளிக்கப்பட்டால், சம்பந்தமில்லாத பெண்களிடம், அவர்களின் தற்காப்பு திறனால், ஆண்களின் அவமானமாக நாம் மாறி விடுவோம்.என்ற பயத்திலேயே ஒழுக்கமாக நடந்து கொள்வார்கள்.


Paramasivam
ஆக 26, 2024 18:17

இந்த தண்டனையை பொது இடத்தில் வைத்து நிறைவேற்ற வேண்டும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ