உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பமேளா கூட்டநெரிசல்; எதிர்பாராத விபத்து என சுப்ரீம் கோர்ட் கருத்து

கும்பமேளா கூட்டநெரிசல்; எதிர்பாராத விபத்து என சுப்ரீம் கோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அலகாபாத் ஐகோர்ட்டை நாட உத்தரவிட்டது. பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில், மவுனி அமாவாசையான கடந்த ஜன.,29ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கும்பமேளாவில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரியும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத உ.பி., அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்கீல் விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது வழக்கு இன்று நீதிபதி சஞ்சீவ் கன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, 'இது எதிர்பாராத விபத்து. இது தொடர்பாக ஏற்கனவே நீதி ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது. இது குறித்து அலகாபாத் ஐகோர்ட்டை அணுகலாம்', எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
பிப் 04, 2025 08:58

விசாரணை ஆபையம் அமைச்சாச்சு. போயிட்டு 2047 ல வாங்க. விசாரிச்சு 30000 பக்கத்துக்கு அறிக்கை குடுப்பாய்ங்க. அப்ப நாமதான் வல்லரசு.


Ramesh Sargam
பிப் 03, 2025 19:58

ஆனால் எதிர் கட்சியினர் எதிர் பார்த்த விபத்து.


என்றும் இந்தியன்
பிப் 03, 2025 17:04

35 கோடி பேர் இது வரை கூடினார்களாம்???கூட்ட நெரிசல்???இதுவே திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு ஆட்சியில் நடந்திருந்தால் 1 லட்சம் பேருக்கு இப்படி நடந்திருக்கும் அதுக்கும் இந்த ரூ 200 உபிஸ் முட்டு கொடுத்திருப்பார்கள்.


Duruvesan
பிப் 03, 2025 14:57

பாஸ் நீங்க வேற, சோத்துக்கே வழி இல்லாத கூட்டதுக்கு ஓசி பஸ், 1000 உரிமை தொகை விடியல் குடுக்கறாரு, இன்னமும் சோத்துக்கு அரசாங்கத்திடம் கை ஏந்தும் கூட்டம் 60% உள்ளது பாட்டாளியும் சேர்த்து . நாங்க கடைசி 12 ல இருப்போம், நான் மீதம் உள்ள 40% உழைத்து சாப்பிடும் பாட்டாளி, எனக்கு எவனும் ஓசில எதுவும் குடுக்க வேண்டாம், எனது குடும்பம் வாங்காது


karthikeyan
பிப் 03, 2025 16:50

"சோத்துக்கே வழி இல்லாத கூட்டதுக்கு ஓசி பஸ், 1000 உரிமை தொகை விடியல் குடுக்கறாரு" நீ உழைத்து சாப்பிடும் பாட்டாளியாக இருக்கலாம், நீயும் சோத்துக்கே வழியில்லாமல் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.


Moorthy
பிப் 03, 2025 14:55

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 03, 2025 14:49

சுப்ரீம் கோர்ட் கிட்ட கருத்து கேட்டார்களா அல்லது அரசுக்கு அறிவுரை சொல்லச் சொல்லி கேட்டார்களா??


vivek
பிப் 03, 2025 15:12

எல்லாம் சரி...இப்போ உன் கருத்தை யார் கேட்டா...உன் HR டிபார்ட்மெண்ட் பாத்துகும்..


தமிழன்
பிப் 03, 2025 14:44

ஏது இது எதிர்பாரா விபத்தா?


அப்பாவி
பிப் 03, 2025 14:30

கீழ்க்கோர்ட்டுக்குப் போங்க. அவிங்க தீர்ப்பு சொன்னதும் நாங்க ரத்து செஞ்சு எங்க தீர்பை சொல்லுவொம். அதுதானே மரபு.


Sampath Kumar
பிப் 03, 2025 14:15

ஏதிர் பாராமல் நடப்பதற்கு பேரு தான் விபத்து ஏதிர் பார்த்து நடந்தால் அதுக்கு பெறு வேற நீதி அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறது பார்த்து உரிய நடவடிக்கை ஏடுக்கவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை