உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தாந்த சண்டை நடக்குது; சிவாஜி வழியில் போராடுவோம் என்கிறார் ராகுல்

சித்தாந்த சண்டை நடக்குது; சிவாஜி வழியில் போராடுவோம் என்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'நாடு அனைவருக்கும் சொந்தமானது. சிவாஜி மகாராஜின் வழியைப் பின்பற்றி, மக்களின் உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்' என்று, மஹாராஷ்டிராவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பேசினார்.மஹாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், ராகுல் பேசியதாவது: சிவாஜி மகாராஜ் எதிர்த்து போராடிய, அதே சித்தாந்தத்திற்காக இன்று காங்கிரஸ் போராடி வருகிறது. பா.ஜ.,வால் நிறுவப்பட்ட சிவாஜி சிலை, சில நாட்களில் இடிந்து விழுந்துவிட்டது. இந்த சம்பவம், சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என்றால், முதலில் அவரது சிந்தாந்தத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

அநீதி

இன்று நாங்கள் சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைத்தோம். சிவாஜி மகாராஜ் தன் வாழ்நாள் முழுவதும் எப்படிப் போராடினாரோ, அந்த விஷயங்களுக்காக நாமும் போராட வேண்டும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் அநீதிக்கு எதிராக போராடினார். நீதி கிடைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் சத்தியத்தின் பாதையைப் பின்பற்றக் கற்றுக் கொடுத்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜ், நாடு அனைவருக்கும் சொந்தமானது. யாருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

சித்தாந்த சண்டை

சிவாஜி மகாராஜின் சிந்தனையின் அடிப்படையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அவரது வழியைப் பின்பற்றி, மக்களின் உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். ராமர் கோயில் மற்றும் பார்லிமென்ட் திறப்பு விழாவிற்கு, பழங்குடியினத்தை சேர்ந்த ஜனாதிபதியை அழைக்கவில்லை. இது அரசியல் சண்டை அல்ல, சித்தாந்த சண்டை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Tetra
அக் 06, 2024 15:15

சித்தாந்தமே இல்லாதவன் சித்தாந்த வழி நடக்கிறானாம். இந்த பைத்தியத்தின் தொல்லை தாங்கல


பேசும் தமிழன்
அக் 06, 2024 08:23

பப்பு..... கான் குடும்பத்தை சேர்ந்த நீங்கள்..எப்படி சிவாஜி மஹாராஜா அவர்களின்.... இந்து வழியில் போராட முடியும்.... சும்மா வாயில் வந்ததை உளற கூடாது.


M Ramachandran
அக் 05, 2024 20:18

அவர்கள் காந்தி வழி மறந்துடுச்சிய போலா.


Jysenn
அக் 05, 2024 19:45

என்ன சரக்கு அடிக்கிறார் என தெரியப்படுத்தினால் மிக நல்லது .


என்றும் இந்தியன்
அக் 05, 2024 18:58

வேடிக்கை என்னவென்றால் 1 சிவாஜி சிலை உடைக்க வைத்தது இந்த முஸ்லீம் நேரு காங்கிரஸ் பப்பு தான் என்று சிலை உடைந்த விவகாரம் ஆய்வு செய்தால் உண்மை வெளியே வரும் 2 சிவாஜி சித்தாந்தம் இந்தியாவை ஒன்று சேர்த்து உயர்த்துவது, முஸ்லிம் நேரு காங்கிரஸ் சித்தாந்தம் இந்தியாவை சின்னா பின்னமாக்குவது அது எப்படி சிவாஜி வழியில் போராடுவோம் என்று பப்பு சொல்லலாம் 3 மோடி வைத்த சிலையை உடைத்து விட்டு தாங்கள் தான் சிவாஜிக்கு சிலை வைத்தோம் மோடி ஒன்றும் செய்யவில்லை என்று டப்பா அடிக்கத்தான் இந்த சிலை வைப்பு செயல்


krishna
அக் 05, 2024 17:47

INDHA KOMALI ORUTHARU.DHINAMUM WEDHAVADHU MODI VERI BAYATHIL ULARIKITTE IRUKKARU.DESA VIRODHA MSFIA MAINO CONGRESS THUDAITHU ERINDHU NAATUKKU NALLADHU.


raja
அக் 05, 2024 17:43

என்னா புப்பு நீ சொல்றத நம்ப அவங்க என்ன டாஸ்மாக் தமிழனா... உன் உடம்பில் அவ்ரங்க சீப் சித்தாந்தம் பாதி, ஜென்றல் டயர் சித்தாந்தம் பாதி என்ற கொள்கை உள்ளவன் என்று தமிழனை தவிர அனைவருக்கும் தெரியுமே...


sridhar
அக் 05, 2024 16:53

அப்போ எம்ஜியார் ரசிகர்கள் வோட்டு உனக்கு கிடையாது .


Jayaraman Easwaran
அக் 05, 2024 16:50

ஒரு புண்ணாக்கு சண்டையும் இல்லை. நீ வேலை இல்லாம ஊர் ஊரா பொய் சொல்லி திரியற


jayvee
அக் 05, 2024 16:46

தீமுகவிடிமிருந்து பப்பு கற்றுக்கொண்டது அல்லது பழைய திமுக விசுவாசி இப்போது பப்புக்கு வசனகர்த்தாவாக இருப்பது .. இப்படி குதர்க்கமாக மூளை இல்லாமல் எதையாவது பேசிக்கொண்டிருப்பது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை