உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக துணை முதல்வரின் முதலீடு; கேரள சேனலுக்கு சி.பி.ஐ., நோட்டீஸ்

கர்நாடக துணை முதல்வரின் முதலீடு; கேரள சேனலுக்கு சி.பி.ஐ., நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், கேரளாவைச் சேர்ந்த 'ஜெய் ஹிந்த்' செய்தி சேனலில் செய்துள்ள முதலீடு குறித்த விபரங்களை அளிக்கும்படி, சி.பி.ஐ., 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கு

இங்கு துணை முதல்வராக இருக்கும் சிவகுமார், மாநில காங்., தலைவராகவும் இருக்கிறார். இவர் மீது, 2020ல் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. சிவகுமாரின் சொத்துக்கள், முதலீடுகள் தொடர்பாக தகவல் சேகரித்து வருகிறது.இதில், கேரளாவைச் சேர்ந்த ஜெய் ஹிந்த் என்ற செய்தி சேனலில், சிவகுமார் முதலீடு செய்துள்ளதற்கான ஆதாரங்கள் சி.பி.ஐ.,க்கு கிடைத்துள்ளன. எனவே, ஜெய் ஹிந்த் சேனலுக்கு, சி.பி.ஐ., நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.

பண பரிமாற்றம்

அதில், சிவகுமார், அவரது மனைவி உஷா உட்பட, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் செய்துள்ள முதலீடுகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட லாபத் தொகை, பண பரிமாற்றம், அவரது வங்கி விபரங்கள் உட்பட, அனைத்து விபரங்களையும் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.மேற்கூறிய விபரங்களுடன், வரும் 11ம் தேதி, சி.பி.ஐ.,யின் பெங்களூரு அலுவலகத்தில் ஆஜராகும்படி, ஜெய் ஹிந்த் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ஜெய் ஹிந்த் சேனல் நிர்வாக இயக்குனர் ஷிஜு கூறுகையில், ''சி.பி.ஐ., கேட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிப்போம். ''நாங்கள் எந்த விதிமீறலும் செய்யவில்லை. லோக்சபா தேர்தல் என்பதால், இந்த வழக்கை மீண்டும் கிளறியுள்ளனர். தேர்தலுக்கு முன்பே, சிவகுமாருக்கு தொந்தரவு கொடுக்க முயற்சிக்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anand
ஜன 01, 2024 13:22

விபரம் கேட்டால் மூடிட்டு கொடுக்கவேண்டியது தானே? அதை விடுத்து அரசியல், தேர்தல், என சொல்லிக்கொண்டு.. ஏதோ ஏடாகூடமான வில்லங்கம் இருக்கும் போலிருக்கு, முதலில் இவனை தூக்கி உள்ளே போட்டு பல உண்மைகள் வெளிவரும்..


P Karthikeyan
ஜன 01, 2024 12:08

கர்நாடகாவில் பெரிய பணக்காரன் இந்த சிவகுமார் தான் ..போதையில் தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் இவர். மாண்டியா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் சிவகுமாரின் சொத்து ..


duruvasar
ஜன 01, 2024 10:50

இங்க கூட ஒரு ஜெய்ஹிந்புரம் எனும் ஒரு அமைப்பு செயல்படுகிறது என்ற தோற்றம் உள்ளது.


Shekar
ஜன 01, 2024 10:02

தேர்தல் வருகிறது அதனால் தொந்தரவு, ஆஹா என்ன அற்புதமான விளக்கம், இதேதான் விடியல் நாட்டிலும் பேசப்படுகிறது தேர்தல் வந்தால் திருடனை பிடிக்கக்கூடாது.


Hari
ஜன 01, 2024 09:52

அதெப்படி அரசியல் வாதிகள் மட்டும் ஒரேமாதிரி ஒரு அறிக்கை விடுறது ,இவனுகளுக்கு உள்ள திருட்டு புத்திக்கு முதலில் அணைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யணும்.


Barakat Ali
ஜன 01, 2024 09:29

சேனலை ஆரம்பிச்சு தூள் கிளப்புற கேடி பிரதர்ஸை ஒன்னும் பண்ணமாட்டோம் ....


Ramesh Sargam
ஜன 01, 2024 07:37

Inter-State ஊழல்.... நம்ம ஆளுங்க படா கில்லாடிகள்... அடுத்து இன்டர்நேஷனல் ஊழல்...


NicoleThomson
ஜன 01, 2024 06:55

சேனல் பெயரை மாற்றிவிடுங்க பிரச்னை தீர்ந்துவிடும்


J.V. Iyer
ஜன 01, 2024 06:40

இவர்கள் எல்லோரும் ஊழல் செய்யலாம். ஆனால் இதை வெளியில் சொல்லக்கூடாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை