உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணி தலைவர் ஆகிறாரா கார்கே?

இண்டியா கூட்டணி தலைவர் ஆகிறாரா கார்கே?

புதுடில்லி: ‛ இண்டியா ' கூட்டணி கட்சி தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதனிடையே, இக்கூட்டணியின் தலைமை பதவியை ஏற்க பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், கார்கேயை கூட்டணியின் தலைவராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறபபடுகிறது.பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ‛ இண்டியா' கூட்டணி என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன. இக்கூட்டணியின் கூட்டம், பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் புது டில்லியில் நடந்தது.இன்று (ஜன-13) இக்கூட்டணி கட்சித் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்.பி., ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தொகுதி பங்கீடு, தேர்தலுக்கு தயார் ஆவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இக்கூட்டணியின் தலைமைப்பதவியில் பீஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதீஷ்குமார் நியமிக்கப்படலாம் எனக்கூறப்பட்டது. ஆனால், அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு அந்தப்பதவியை வழங்கலாம் எனவும் அவர் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.இதனையடுத்து இண்டியா கூட்டணியின் தலைவர் பதவியில் மல்லிகார்ஜூன கார்கேயை நியமிக்கலாமா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மம்தா மற்றும் அகிலேஷ் யாதவுடன் ஆலோசித்த பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுமூகம்

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் காணொளி வாயிலாக விவாதம் நடத்தினோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசித்தோம்.ராகுல் மணிப்பூரில் துவங்க உள்ள யாத்திரையில் அனைத்து இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களின் வசதிக்கேற்ப பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். பொருளாதார பிரச்னைகளை எழுப்புவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ராகுல் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே தெரிவித்துள்ளார்.

சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் கார்கேவை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது தொகுதி பங்கீடு பற்றி இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

sankar
ஜன 13, 2024 18:07

நமது ஜனாதிபதி மோசமானவர் "கம்சோர்" என்று பாராளுமன்றத்தில் விமரிசிக்க கயவன்


K.Muthuraj
ஜன 13, 2024 18:04

இண்டி கூட்டணி ஜெயித்தால் மிக எளிதாகவே ஆட்சி நடத்தி விடுவார்கள். அது - மாநில அரசுகளின் நிர்வாகங்களை கண்டு கொள்ளாமல் இருத்தல்-. உன்னை நான் கண்டு கொள்ள மாட்டேன் என்னை நீ கண்டு கொள்ளக்கூடாது என்பதே-


Krishnamoorthy Nilakantan
ஜன 13, 2024 17:40

இவர் தலைவர் ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான் சிங்கத்தை சுற்றிச்சுற்றி வரும் கழுதைப்புலி கள்


ராமகிருஷ்ணன்
ஜன 13, 2024 17:32

நீங்கள் எந்த தலையாகவும் இருக்கலாம் ஆனால் காங்கிரஸ் குடும்பத்தினருக்கு கொத்தடிமை தானே. அதை மாற்ற முடியாது.


Anand
ஜன 13, 2024 17:29

அடுத்த பத்து வருடம் கழித்தும் இதே கூத்தை தான் காண்போம்... ஒரே வித்தியாசம் சில தலைகள் இருக்காது...


ஆரூர் ரங்
ஜன 13, 2024 16:49

கூட்டணித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குள் தேர்தலே முடிந்து விடும்.


Anand
ஜன 13, 2024 16:08

நிதிஷ் மறைமுகமாக என்ன சொல்ல வர்றார்னா, கூட்டணி தலைவராக லாலுவை நியமிக்கவேண்டுமாம், பிரதமர் வேட்பாளராக தம்மை பரிந்துரைக்கவேண்டுமாம்..........


அசோகன்
ஜன 13, 2024 16:04

பாவம் நிதிஷ்க்கு ஆசை அரசனாகளாம் என்று ஆனா கொடுத்துவைத்தது ..... ????????????????????


குமரி குருவி
ஜன 13, 2024 15:45

இண்டியா கூட்டணி தோல்வியைதாங்க பலிகடா தயார்.


ஆரூர் ரங்
ஜன 13, 2024 15:04

ஊழல் கறைபடியாத லாலுவைத் தலைவராக்கி விடலாம். கூட்டணிக்குப்???? பொருத்தமாக இருக்கும்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ