உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டமால்!: உடைந்தது இண்டியா கூட்டணி

டமால்!: உடைந்தது இண்டியா கூட்டணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஓரம்ச குறிக்கோளுடன் 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா என்ற பெயரில் உருவாக்கிய கூட்டணி, தொகுதிகள் பங்கீடு குறித்து பேச ஆரம்பித்த நிலையில் டமால் என உடைந்துள்ளது.கடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் வென்று மத்தியில் ஆட்சியை பிடித்த பா.ஜ., ஏப்ரலில் நடக்க இருக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே அக்கட்சியை தேர்தலில் வீழ்த்த முடியும் என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் உணர்ந்தன. அதன் விளைவாக 28 கட்சிகள் இடம் பெற்ற இண்டியா கூட்டணி உருவானது. பாட்னா, பெங்களூரு, மும்பை, டில்லியில் இந்த கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து, அணியை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதித்தனர். ஆனால், பல மாநிலங்களில் இக்கட்சிகள் ஒன்றை ஒன்று தீவிரமாக எதிர்த்து அரசியல் செய்வதால், அவரவர் வலுவாக உள்ள தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.இதனால் துவக்கத்தில் இருந்தே தொகுதி பங்கீடு விஷயத்தில் உரசல் இருந்து வருகிறது. குறிப்பாக, மேற்கு வங்கம், டில்லி, பஞ்சாப், கேரள மாநிலங்களில் இந்த உரசல் வலுத்து மோதல் நிலைக்கு வந்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல்வர் மம்தா நேற்று அறிவித்தார். அவர் கூறியதாவது:கடந்த தேர்தலில், மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. அந்த இரு தொகுதிகளை தர தயாராக இருந்தோம்; அதை காங்கிரஸ் ஏற்கவில்லை. அதிகமாக கேட்கிறது. அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. அந்தந்த மாநிலங்களில் எந்த கட்சி வலுவாக உள்ளதோ அதுதான் பா.ஜ.,வுக்கு எதிராக அதிக தொகுதிகளில் களமிறங்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியுள்ளோம். அதன்படி, மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். நாடு முழுதும், 300 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடட்டும். மீதமுள்ள தொகுதிகளில், அந்தந்த பிராந்தியத்தில் வலுவான கட்சிகள் போட்டியிட வேண்டும். அதற்கு சம்மதித்து பரஸ்பரம் ஒத்துழைப்பு அளித்தால், தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக இண்டியா கூட்டணியுடன் விவாதிப்போம். இவ்வாறு கூறினார்.ராகுலின் யாத்திரை இன்று மே. வங்கத்துக்குள் நுழைய உள்ள நேரத்தில் மம்தா இப்படி அறிவித்திருப்பது, கூட்டணியில் உள்ள 26 கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதிர்ச்சி அடையாத மற்றொரு கட்சி ஆம் ஆத்மி. அது ஏற்கனவே பஞ்சாபில் காங்கிரசை ஓரமாக நிறுத்தியிருக்கிறது. மம்தாவை போல ஓப்பனாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் அறிவிக்கவில்லை. பஞ்சாப் முதல்வர் அதை செய்திருக்கிறார். இதுகுறித்து முதல்வர் பகவந்த் சிங் மான், “மாநிலத்தின் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும்,” என்றார்.

அவர்களே இடிக்கின்றனர்

இண்டியா கூட்டணி கட்சிகள், மிகுந்த குழப்பத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும், தங்களது மாளிகையின் துாண்களை, அவர்களாகவே இடித்து தள்ளுகின்றனர். மம்தாவின் அறிவிப்பு, கூட்டணிக்கான சாவுமணி.ஷெஸாத் பூனாவாலாசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

meenakshisundaram
பிப் 08, 2024 05:28

எங்கள் தலைவர் மாத்திரம் அதில் கடைசி வரை இருப்பார் -ஏனென்றால் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்


kumar
ஜன 30, 2024 00:48

'இண்டி ' கூட்டணி என்று குறிப்பிடவும் 'இண்டியா " கூட்டணி என்பது தவறு .


katharika viyabari
ஜன 28, 2024 20:41

நம்ம ஆள் அங்க உட்கார்திருக்கிற கம்பீரத்தை பாருங்க....எல்லாம் பிறவியில் வந்தது.


Saai Sundharamurthy AVK
ஜன 25, 2024 22:09

ராகுல், சோனியாவின் சதி திட்டத்தை புரிந்து கொண்டு விட்டார்கள். இந்த மாதிரி கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்து தங்கள் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள சதி திட்டம் தீட்டியிருந்தது குறித்து மம்தாவும், கெஜ்ரியும் கண்டுபிடித்து விட்டார்கள். ஆக, இண்டி கூட்டணி கோவிந்தா !கோவிந்தா ! ????????


பேசும் தமிழன்
ஜன 25, 2024 21:04

பப்பு யாத்திரை முடியும் போது... கான் கிராஸ் கட்சி இந்த நாட்டுக்கு செய்த துரோகங்களுக்கு நியாயம் கிடைத்து விடும் போல் தெரிகிறது... கான் கிராஸ் கட்சிக்கு காரியம் செய்து விட்டு தான் பப்பு ஓய்வார் !!!


g.s,rajan
ஜன 25, 2024 20:53

டுமீல் .....


Barakat Ali
ஜன 25, 2024 19:57

ஆம் ஆத்மி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ......... இந்த இரு கட்சிகளும் வெளிப்படையாக பிஜேபியை எதிர்த்தாலும் வாக்குகளை பிரித்து பிஜேபிக்கு உதவுவதற்காகவே தோற்றுவிக்கப்பட்டவை .என்றே தோன்றுகிறது ..... குறைந்த பட்சம் இவர்கள் பிஜேபியிடம் விலைபோயிருக்கலாம் ....


பேசும் தமிழன்
ஜன 25, 2024 20:56

அப்படியா.... நேத்து வரைக்கும் சொல்லவே இல்லை.... சீட் கொடுத்தால் சகோதரி.... சீட் இல்லையென்றால் B டீம் ???


Rajah
ஜன 25, 2024 18:09

மஹாத்மா காந்தியின் வம்சாவளி தலைவரிகளின் கட்சி காங்கிரஸ் என்று நம்பியிருந்த மக்கள் இன்று புரிந்து கொண்டார்கள் அதோடு விழித்துக்கொண்டார்கள். இவர்கள் ஆட்சியில் இருந்ததற்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தது காந்தி என்ற பெயர்தான். மம்தாவின் பின்னால் உள்ள குல்லாக்களால் அவர் அழிந்து விடுவார். அதுதான் திராவிட கட்சிகளுக்கும் நடக்கும்.


gvr
ஜன 25, 2024 18:06

None of these jokers are interested about India. They juzt want to be PM and quash corruption cases pending against them.


A1Suresh
ஜன 25, 2024 17:15

திங்கள்- மமதா தீதி, செவ்வாய்-கேஜ்ரிவால், புதன்- சரத் பவார், வியாழன்- அகிலேஷ் யாதவ், வெள்ளி- டாலின், சனி-ஞாயிறு - பப்பு ...........இப்படி நாளொன்றிற்கு ஒரு பிரதமர் ஆக இருக்க பகல் கனவு காண்கின்றனர்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ