உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்செக்ஸ் 75 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை

சென்செக்ஸ் 75 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் 75 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் 2024-25 நிதியாண்டின் முதல் வர்த்தக நாளில் இருந்து உயர்வுடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்றும் (ஏப்.,9) ஏற்றத்துடன் வர்த்தகமாகின. வர்த்தகம் துவங்கியதுமே முதன்முறையாக சென்செக்ஸ் 381.78 புள்ளிகளை கடந்து 75,124.28 புள்ளிகளை எட்டி சாதனை படைத்துள்ளது. அதேபோல் நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 22,765.10 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை எட்டியது.நிறுவனங்களின் நம்பிக்கையூட்டும் காலாண்டு வருவாய், நிலையான ரெப்போ வட்டி விகிதம், நேர்மறையான உலக பொருளாதார குறியீடுகள், லோக்சபா தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளிட்டவை பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
ஏப் 09, 2024 12:20

UPA ஆட்சி வெளியேறிய போது புள்ளிகளை தாண்ட முடியவில்லை இப்போது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது இது மக்களிடையே அரசின் மீதும் தொழில் வளர்ச்சி மீதும் உள்ள நம்பிக்கையைக் குறிக்கிறது


மேலும் செய்திகள்