உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தலில் போட்டி எதீந்திரா கடும் குழப்பம்

லோக்சபா தேர்தலில் போட்டி எதீந்திரா கடும் குழப்பம்

மைசூரு: ''லோக்சபா தேர்தலில் போட்டியிட, நான் டிக்கெட் கேட்கவில்லை. கட்சி மேலிடம் விரும்பினால், போட்டியிடுவேன். இதுவரை போட்டியிடுவது குறித்து யோசிக்கவில்லை,'' என வருணா தொகுதி பாதுகாப்பு குழு தலைவரும், முதல்வர் சித்தராமையா மகனுமான எதீந்திரா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:நம் நாடு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும். நாடு என்பது எந்த ஒரு மதத்தையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது.பாகிஸ்தானிலும் வேறு சிலநாடுகளிலும் மதத்தின் பெயரால் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான், நான் ஹிந்து தேசமாக மாறுவது ஆபத்தானது என்று சொன்னேன். நான் கூறியதில் தவறேதும் இல்லை.வளர்ச்சிக்கு பதிலாக மதத்தின் பெயரால் பா.ஜ., அரசியல் செய்கிறது. மதப் பிரச்னையை முன்வைத்து மற்ற விஷயங்களை கட்சி மறைக்கிறது.முதல்வர் சித்தராமையா என்னை அரசியல் ரீதியாக முடிக்க போகிறார் என கூறிய பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, 'அவரே தேசிய தலைவராக கருதுகிறார்'.இவரது சகோதரர் விக்ரம் சிம்ஹா, மரம் வெட்டிய வழக்கை திசை திருப்ப, இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.லோக்சபா தேர்தலில் போட்டியிட, நான் டிக்கெட் கேட்கவில்லை. கட்சி மேலிடம் விரும்பினால், போட்டியிடுவேன். இதுவரை போட்டியிடுவது குறித்து யோசிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ