உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுவாமியே சரணம் ஐயப்பா (16) தினமும் ஒரு தகவல்

சுவாமியே சரணம் ஐயப்பா (16) தினமும் ஒரு தகவல்

பம்பா நதிக்கரையில்... எவ்வளவு சம்பாதித்தாலும் செலவாகி விடுகிறது. திருமணம் ஆகவில்லை; குழந்தை இல்லை; நிம்மதியைத் தேடி அலைகிறேன் என பலரும் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.இதற்கு காரணம் முன்னோரை வழிபடாமல் இருப்பதே. 'மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ' என்கிறது வேதம். மனிதராகப் பிறந்த அனைவரும் முன்னோருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். இதைத்தான் தர்ப்பணம் கொடுப்பது என்கிறோம். சபரிமலை யாத்திரையின் போது முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற இடமே பம்பா நதிக்கரை. கங்கைக்கு நிகரான இந்த நதியில்தான் ஸ்ரீராமர் தன் தந்தை தசரதருக்கு தர்ப்பணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், ''முன்னோருக்கு தர்ப்பணம் செய்ததால் முன்வினைப் பாவம் நீங்குவதோடு எல்லா நன்மையும் தேடி வரும்'' என வரமளித்தார். உதயணன் போரில் இறந்த வீரர்களுக்கு சுவாமி ஐயப்பன் இங்குதான் தர்ப்பணம் கொடுத்துள்ளார். இப்படி மகத்துவமான இந்த நதியில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது. இதன் மூலம் அவர்களின் ஆசி நம் குடும்பத்திற்கு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை