உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது: அருணாச்சலில் 17 பேர் பலியானதாக அச்சம்

தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது: அருணாச்சலில் 17 பேர் பலியானதாக அச்சம்

இட்டாநகர்: அருணாச்சல் எல்லையில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 17 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.இந்த விபத்து கடந்த டிசம்பர் 8 அன்று நடந்திருந்தாலும், காயமடைந்தவர்களில் ஒருவர் தலைநகரத்தை அடைந்து, அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னரே இது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் குறித்து அஞ்சாவ் மாவட்ட துணை கமிஷனர் மில்லோ கோஜின் கூறியதாவது:அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையோரம் உள்ள ஹயுலியாங்-சக்லகாம் சாலையில் ஒரு பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. 21 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடத்த இடம் இந்தியா-சீனா எல்லையிலிருந்து 45 கி.மீ தொலைவிலும் 10 ஆயிரம் அடி உயரத்திலும் உள்ள பகுதியாகும். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடக்கிறது. இவ்வாறு மில்லோ கோஜின் கூறினார்.

அசாம் முதல்வர் இரங்கல்

அருணாச்சலில் தொழிலாளர்களுடன் சென்ற லாரி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் அசாமை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.ஹிமந்த பிஸ்வா சர்மா பதிவிட்டுள்ளதாவது:அருணாச்சலில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இங்குள்ள அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள், காணாமல் போன நபர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படுவதையும் நாங்கள் உறுதிசெய்து வருகிறோம்.இந்தக் கடினமான நேரத்தில், துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை