உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குரலை தாழ்த்துங்க; என்ன மிரட்டுறீங்களா? வக்கீலிடம் கொந்தளித்த தலைமை நீதிபதி

குரலை தாழ்த்துங்க; என்ன மிரட்டுறீங்களா? வக்கீலிடம் கொந்தளித்த தலைமை நீதிபதி

புதுடில்லி, நீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவது தொடர்பாக குரலை உயர்த்தி, அதிகார தோரணையில் வழக்கறிஞர் பேசியதால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ''குரலை தாழ்த்தி பேசுங்கள்; இப்படி பேசினால் நீதிபதிகள் பயந்துவிடுவர் என நினைக்கிறீர்களா?'' என, கண்டிப்புடன் எச்சரித்த சம்பவம் நேற்று அரங்கேறியது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிமன்ற அறை எண்.1ல், வழக்கு விசாரணை நேற்று நடந்து கொண்டிருந்தது.

மன்னிப்பு

அப்போது, வழக்குகளை பட்டியலிடுவது தொடர்பாக, தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த விவாதத்தின் போது குரலை உயர்த்தி, அதிகார தோரணையில் அந்த வழக்கறிஞர் பேசத் துவங்கியதும், தலைமை நீதிபதி சந்திரசூட் ஆவேசமானார். உடனடியாக குறுக்கிட்ட தலைமை நீதிபதி கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்ற அறை எண்.1ல் நின்றுகொண்டு நீங்கள் விவாதிக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.உங்கள் குரலை தாழ்த்துங்கள்; இல்லையெனில், நீதிமன்றத்தில் இருந்து உங்களை நீக்க வேண்டியிருக்கும். நீங்கள் எந்த நீதிமன்றத்தில் வழக்கமாக ஆஜராகிறீர்கள்? இப்படித் தான் நீதிபதிகளை பார்த்து உரக்கப் பேசுவீர்களா?நீங்கள் குரலை உயர்த்திப் பேசினால் நீதிபதிகள் பயந்துவிடுவர் என நினைத்தால் அது தவறு. என் 23 ஆண்டு கால பணி அனுபவத்தில் அது நடந்தது இல்லை; கடைசி ஆண்டிலும் நடக்காது.இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து, தன் செயலுக்கு அந்த வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிமன்ற அறையில் இவ்வாறு கொந்தளிப்பது இது முதன்முறையல்ல.

வெளியேற்றம்

ஏற்கனவே ஒரு முறை நீதிமன்ற அறையில், மொபைல் போனில் பேசிய வழக்கறிஞரை கண்டித்ததுடன், அவரது மொபைல் போனை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் குரலை உயர்த்திப் பேசிய வழக்கறிஞர் விகாஸ் சிங் என்பவரை, நீதிமன்ற அறையில் இருந்து உடனடியாக வெளியேற்றிய சம்பவமும் கடந்த காலங்களில் அரங்கேறிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

M Ramachandran
ஜன 05, 2024 20:32

வக்கீல் சேருவார் தோஷம். R.S. பாரதி கொஞ்சானாலா காணோமாம் அவர் இடத்திற்கு முயற்சிக்கிறார்


MARUTHU PANDIAR
ஜன 04, 2024 17:43

கட்சிக்காரனுவ அப்படி தான் நடந்துக்குவானுக+++


Rengaraj
ஜன 04, 2024 12:34

மேடையில் மைக்கை பிடித்து உரக்க பேசுவதுபோல் , தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கத்தி கத்தி பேசுவது போல் நீதிமன்றங்களில் பேசினால் தலைமை நீதிபதி இப்படி கொந்தளிக்கத்தான் செய்வார். சினிமாவை பார்த்து பார்த்து நிறைய பேர் நீதிமன்றம் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 11:37

பொய்களை, சாத்தியமற்றதை உரக்க, ஆணித்தரமாக சொல்வது திமுகவினரின் அடிப்படை குணம். ஒருவேளை அந்த வக்கீல் திமுகவாக இருக்கலாம்.


Babu Sriram Ambari
ஜன 04, 2024 10:16

காது கேட்கும் திறன் குறைவாகிவுள்ளவர்கள் குரலை உயர்த்தி பேசுவது சகஜம். பெரும்பாலும் வயதானவர்கள் அதிக சத்தத்துடன் பேசுவார்கள் இதில் தவறு இல்லை.


V GOPALAN
ஜன 04, 2024 09:56

In Tamilnadu all political lawyers got certificate only from Andhra Chitoor University. Their body language will show from where they took degree. They don't know any section throughly. Ask our Thiruma first to refer some section for some cases.


Sampath Kumar
ஜன 04, 2024 09:53

குரலை உயர்த்தி பேசினால் அது ஊன்றும் அதிகார தோரணை இல்லை சில பேரு வாயை திறக்காமலே பல காரியங்களை கண்ணசைவில் செய்து முடிகின்டர்கள் ஆகையில் குரல் உயர்த்தி பேசுவது ஒரு சிலரின் பழக்கம் அம்புட்டு தான் யுவர் ஹானர்


Mohan
ஜன 04, 2024 10:24

எல்லாம் அவர்களுக்கு தெரியும் யுவர் ஹானர் ..


Anand
ஜன 04, 2024 13:43

இந்த அடிமை என்னமா முட்டுக்கொடுக்கிறான், அந்த வழக்கறிஞர் திருட்டு கூட்டத்தை சேர்ந்தவன் போலிருக்கு....


S.A.Chandrasekaran
ஜன 04, 2024 09:44

பணிவுடன் கருத்தை எடுத்துரைக்க வேண்டிய இடம் நீதிமன்றம். எவ்வளவு தான் தன்னுடைய கருத்து நியாயமானதாக இருந்தாலும், தன் எண்ணம் தூய்மையானதாக இருந்தாலும், அதை வெல்வதற்கு பணிவுடன் செயல்பட்டு சாதிக்க வேண்டும். " காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? "


Dharmavaan
ஜன 04, 2024 08:35

நீதிபதிகளை நெறிப்படுத்துவது யார் அகம்பாவமான பேச்சு இவரிடம் எப்போதும்


karupanasamy
ஜன 04, 2024 06:50

பரம யோக்கியன் கோபால்சாமி நாயுடு, அநியாயத்துக்கு நியாயஸ்த்தன் கிருஷ்ணன் வீரமணி, நாகரீக பண்பாளர் ஆரெஸ் பாரதி இவெங்கல்லாம் கூட வக்கீலுங்கத்தான்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ