உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.5 கோடி கேட்டு சல்மான் கானுக்கு மிரட்டல்: பாடலாசிரியர் கைது

ரூ.5 கோடி கேட்டு சல்மான் கானுக்கு மிரட்டல்: பாடலாசிரியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 5 கோடி ரூபாய் கேட்டு பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த கர்நாடகாவைச் சேர்ந்த , பாடலாசிரியரும் , யூடியூபருமான 24 வயதான சொகைல் பாஷாவை மும்பை போலீசார் இன்று கைது செய்தனர்.மிரட்டல் குறித்து போலீசார் கூறியதாவது:நவம்பர் 7ம் தேதி, போலீஸ் வாட்ஸ்அப் ஹெல்ப்லைனுக்கு, 'ரூ. 5 கோடி கொடுக்கவில்லை என்றால், சல்மான் கானும் மெயின் சிக்கந்தர் ஹூன் பாடலாசிரியரும் கொல்லப்படுவார்கள். ஒரு மாதத்திற்குள் பாடலாசிரியர் கடுமையான பதிலடியை சந்திக்க நேரிடும். சல்மான் கானுக்கு தைரியம் இருந்தால் அவர்களை காப்பாற்ற வேண்டும்' என மிரட்டல் வந்தது.தீவிர விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் இருந்து மிரட்டல் விடுத்திருந்ததை கண்டுபிடித்தோம். மிரட்டல் விடுத்தவர் பாஷா என்றும் மெயின் சிக்கந்தர் ஹூன் பாடலை எழுதியவர் என்றும் தான் பிரபலமாக வேண்டும் என்று இந்த காரியத்தை செய்தது தெரியவந்தது.விசாரணையில், உள்ளூர் விவசாயி ஒருவரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பாஷா மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.ஆரம்பத்தில், 1998ம் ஆண்டு முதல் பிளாக்பக் வேட்டையாடப்பட்ட வழக்குடன் தொடர்புடைய பிரச்னைகளில் பாலிவுட் நடிகரை குறிவைத்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் இந்த மிரட்டல் அனுப்பப்பட்டதாக நம்பினோம்.பின்னர் தான், இந்த பாடலுக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக பாடலாசிரியர் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. பாஷாவை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
நவ 13, 2024 23:07

கவுண்டமணி விட்டு ஒருவர் மொள்ளமாரி இன்னொருவர் முடிசாவுக்கி . அமைதியில் திருடன் பலே திருடன் புது திருடன் என கலர் கலராக வெளியே வருகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை