உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., முதல்வராக பதவியேற்றார் பட்னவிஸ்

மஹா., முதல்வராக பதவியேற்றார் பட்னவிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் 10 நாட்களுக்கு மேல் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. முதல்வராக பா.ஜ.,வின் பட்னவிஸ் பதவியேற்றுக் கொண்டார். கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டனர்.பட்னவிஸ் முதல்வராக பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அடங்கிய 'மஹாயுதி' கூட்டணி 288 தொகுதிகளில் 230 ஐ கைப்பற்றியது. 132 தொகுதிகளில் வென்ற பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 57, அஜித்பவாரின் தேசியவாத காங்., 41 இடங்களை பிடித்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v9blg9fr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதிய அரசு பதவியேற்பு விழா இன்று( 5ம் தேதி) நடக்கும் என அறிவித்து பா.ஜ., மேலிடம் அறிவித்தது. முதல்வராக யார் பதவியேற்பார் என்பதில் 10 நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. நேற்று நடந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபைக்கான பா.ஜ., தலைவராக பட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோருடன் ராஜ்பவன் சென்று, கவர்னர் சி.பி.ரதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இன்று மாலை 5:30 மணிக்கு பதவிப்பிரமாணம் நடக்கும் என கவர்னர் அறிவித்தார்.இதன்படி, இன்று மாலை நடந்த விழாவில் முதல்வராக பட்னவிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோரும் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், சல்மான் கான், சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வாழ்த்துமுதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raj S
டிச 06, 2024 00:14

கோபாலபுர கொத்தடிமை யாரையும் காணோமே, ஒரு வேல பேதி மாத்திரை வாங்க போய் இருப்பாங்களோ?


தாமரை மலர்கிறது
டிச 05, 2024 21:45

அடுத்த பிரதமர் பாட்னவிஸ் என்பதில் சந்தேகமில்லை. பிஜேபியில் பிரதமர் பதவிக்கு திறமை உள்ளவர்களை முன்பே ரெடி செய்துவிடுவார்கள். எனவே தொய்வு ஏற்பட வாய்ப்பே இல்லை. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிஜேபி தான் இந்தியாவை ஆளும். வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுத்து, வீணா போகும் கட்சிகள் திமுகவும் காங்கிரஸ் ம் தான்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 05, 2024 19:38

20 நிமிடங்களில் பதவியேற்பு விழா எந்த கோஷமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் முடிந்துவிட்டது. வயிற்றெறிய்சல் பார்ட்டி மட்டும் அழைத்தும் விழாவிற்கு வரவில்லை.


A1Suresh
டிச 05, 2024 19:02

வாழ்க பாஜக நல்லாட்சி. வாழ்க பட்நவீஸ்


abdul
டிச 05, 2024 18:32

வந்தவர்களையும் நடுத்தெருவில் விட்டுவிட்டார் முன்னாள் முதல்வர்


Bye Pass
டிச 05, 2024 20:20

பாக்கிஸ்தான் இம்ரான் நிலைமையை என்னுயி பாருங்க …


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை