உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்; மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட குவிந்த பக்தர்கள்!

மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்; மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட குவிந்த பக்தர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: மவுனி அமாவாசையை முன்னிட்டு, மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, அடுத்த மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு நீராடி வருகின்றனர். இதுவரை 15 கோடிக்கு அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jjqejo4w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (ஜன.,29) வட மாநிலங்களில் மவுனி அமாவாசையை முன்னிட்டு வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மவுனி அமாவாசை என்பது வழிபாட்டு தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு செய்வார்கள். மவுனி அமாவாசை என்பதால், இன்று ஒரே நாளில் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு 10 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் வழிபாட்டு தலங்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதனால் காலையில் லேசான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆனால் போலீசார் உட்பட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனால் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடக்கு பிரயாக்ராஜில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கும்பமேளா நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் குறித்து, அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் ரவீந்திர புரி கூறியதாவது: காலையில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நடந்த சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது எங்கள் அனைத்து துறவிகளும் சங்கமத்தில் குளிக்க தயாராக இருந்தனர். எங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருந்தனர். பொதுமக்கள் நலன் கருதி சங்கமத்தில் இன்று குளிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் விரும்புவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் புனிதமான கங்கை நீரில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் நீராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
ஜன 29, 2025 12:31

தங்கள் முன்னோரை நினைத்து வழிபடும் ஒவ்வொரு தமிழனும் அதன்மூலம் பெரியானுக்கு சுளீரென்று அடி கொடுக்கிறான். இதை பார்த்து உலகம் சொல்லும் தமிழகம் யார் மண் என்று அவனுக்கு மட்டும் அடி கொடுத்தால் போதாது. அவன் அடிவருடிகள் இன்றும் அவன் பெயரை தாங்கிக்கொண்டு அவனுக்கு கவுரவம் கொடுக்கும் வகையில் பேசிக்கொண்டு இருக்கிறார்களே அவனுகளுக்கும் பலமான அடி கொடுத்து மொத்தமாக காலிசெய்யும் நாளன்றுதான் நம் முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள்


Petchi Muthu
ஜன 29, 2025 09:11

அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது


புதிய வீடியோ