உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா மண்ணின் மைந்தனே முதல்வராவார்: தேதி, நேரம் குறித்த வி.கே.பாண்டியன்

ஒடிசா மண்ணின் மைந்தனே முதல்வராவார்: தேதி, நேரம் குறித்த வி.கே.பாண்டியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ''ஒடிசா மண்ணின் மைந்தன் ஜூன் 9ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணிக்குள் முதல்வராக பொறுப்பேற்பார்,'' என 5டி திட்ட தலைவரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், தமிழருமான வி.கே.பாண்டியன் கூறியுள்ளார்.ஒடிசாவில் சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் சேர்த்து 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 3 கட்டங்கள் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆட்சியில் இருக்கும் பிஜூ ஜனதா தளத்திற்கும் பா.ஜ.,வுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக இருந்த தமிழரான வி.கே.பாண்டியன், ராஜினாமா செய்து, பின்னர் அவரது கட்சியில் சேர்ந்து பிஜூ ஜனதா தளத்திற்கு ஆதரவான பிரசாரத்தை வழிநடத்தி வருகிறார்.நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக அறியப்படும் வி.கே.பாண்டியன், இந்த தேர்தலில் நிற்கவில்லை என்றாலும், அவரே முதல்வரையும் ஆட்சியையும் வழிநடத்துவதாக பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது. வயதை காரணம்காட்டி நவீன் பட்நாயக் ஓய்வெடுத்துவிட்டு, வி.கே.பாண்டியன் ஆட்சியை கவனிப்பார் என்றும் விமர்சிக்கின்றனர். இதனை மனதில் வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒடிசாவைத் தமிழர் ஆள அனுமதிக்க முடியாது எனப் பேசி வருகிறார். அதோடு, ஒடியா மொழிப்பேசும் இளம் தலைவரை தான் முதல்வராக்குவோம் என்றும் உறுதியளித்தார்.

தேதி, நேரம்

தமிழரான வி.கே.பாண்டியனை குறிவைத்து முன்னெடுக்கப்படும் பிரசாரத்தை பா.ஜ., கையிலெடுத்துள்ளதை ஒடிசா மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது ஜூன் 4ல் தேர்தல் முடிவின்போது தெரியவரும். இது தொடர்பாக வி.கே.பாண்டியன் கூறுகையில், ''ஜூன் 9ம் தேதி எங்கள் அரசு மீண்டும் ஆட்சியில் அமரும். ஒடியா மொழி பேசுபவராக மட்டுமல்லாமல், இம்மாநில மக்களின் இதயங்களில் வாழ்பவரே முதல்வராக இருப்பார். ஜூன் 9ல் காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணிக்குள், இந்த மண்ணின் மைந்தன் முதல்வராக பொறுப்பேற்பார்'' என பதிலளித்தார்.

முதலைக்கண்ணீர்

மேலும் வி.கே.பாண்டியன் கூறியதாவது: மத்திய அரசின் தலைவர்களும், பா.ஜ., மாநில முதல்வர்களும் தேர்தலுக்காக ஒடிசா மாநிலத்திற்கு வருவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் மாநிலத்திற்கு ஒன்றும் செய்யாதவர்கள் என்பதால் எதுவும் நடக்காது. ஒடிசாவிடம் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி அளவிற்கு பெற்றுக்கொண்டு வெறும் ரூ.5,000 கோடியை மட்டுமே திருப்பி தருகின்றனர். இப்படியான செயலை செய்துவிட்டு, ஒடிசா கனிமவளம் மிக்க மாநிலம் என முதலைக்கண்ணீர் விடுகின்றனர். நிலக்கரிதான் எங்கள் மாநிலத்தின் சிறந்த வளம். அவற்றில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்துக்கொண்டு, ரூ.4 ஆயிரம் கோடியை மட்டுமே தருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக நிலக்கரிக்கான காப்புரிமையை ஏன் திருத்தவில்லை? ஒடிசாவில் இருந்து எதையெல்லாம் மத்திய அரசு எடுக்கிறது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Jagan (Proud Sangi)
மே 29, 2024 19:20

நான் சங்கி தான் ஆனா அமித் ஷா சொன்னது தப்பு. ஏன் தமிழன் அங்க வரக்கூடாதா ? இந்திய ஒரே நாடு, திறமையானவர்கள் எங்குவேண்டுமானாலும் வரலாம். கழகக்காரன் மாதிரி பேசுவதை பிஜேபி தவிர்க்க வேண்டும்


Vathsan
மே 29, 2024 19:35

சூப்பர் அண்ணா


Anand
மே 29, 2024 15:40

பயங்கர கில்லாடியாக இருப்பான் போலிருக்கு, கெஜ்ரிவாலுக்கு போட்டியாக வர வாய்ப்புள்ளது.


Anantharaman Srinivasan
மே 29, 2024 15:07

ஒரிசாவை தமிழன் ஆள வாய்ப்பு கிடைத்தால் அமித்ஷாக்கு ஏன் உடம்பெல்லாம் அரிக்கிறது? குஜாராத்தில் மட்டும் ஜெயித்து இந்தியா முழுமைக்கும் உள்துறை மந்திரியாயிருக்கலாமா..?


Sathyanarayanan Sathyasekaren
மே 29, 2024 20:19

தங்களின் அறிவு புல்லரிக்க வைக்கிறது, எந்த காலெஜ்ல் படித்தீர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்.


Pandianpillai Pandi
மே 29, 2024 15:03

ஒடிசா மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்காக தன்னை அர்பனித்தவர். மக்களின் ஏக போக செல்வாக்கு பாண்டியன் அவர்களுக்கு உண்டு இவரை பற்றி ஒடிசாக்காரர் என்னிடம் புகழ்ந்த போதுதான் தமிழர் ஒருவருக்கு வெளிமாநிலத்தில் இவ்வளவு மரியாதையா என்று அவரை பற்றி அறியப்பட்டேன் அவர் ஆற்றிய பணிகளை கண்டு வியந்தேன்.பாஜக அரசியல் அங்கு எடுபடாது. ஒடிசாவில் வேறுபாடின்றி ஆட்சி நடக்கிறது. எங்கு நல்லாட்சி நடந்தாலும் பாஜக விற்கு பிடிக்காது.


Vathsan
மே 29, 2024 19:38

எனக்கு தெரிந்த ஒரிசா காரர்களும் பாண்டியன் பற்றி மிக உயர்வாகவே பேசுகிறார்கள். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறார்கள் பாஜகவினர்.


ஆரூர் ரங்
மே 29, 2024 14:36

மத்திய பிரதேச வசுந்தரா ராஜே ராஜஸ்தான் மருமகளாக ஆகி அங்கு முதல்வராக ஆனார். அப்போது மத்தியப்பிரதேசத்தில் யாரும் பெருமையாக பேசவில்லை. கண்டுகொள்ளவுமில்லை. பாண்டியன் ஒடிஷா பெண்ணை மணந்து தன்னுடைய விலாசம், வாக்காளர் பதிவு எல்லாவற்றையும் அங்கு மாற்றிக் கொண்டு விட்டார். வீட்டில் பேசுவதும் ஒரியாதான். ஆனாலும் அங்கே நியாயமற்ற வந்தேறியாகவே பார்க்கப்படுகிறார். தமிழர் என எண்ணி பாண்டியனின் அரசியல் அராஜகத்திற்கு நாம் ஆதரவளிக்க கூடாது.


Jai
மே 29, 2024 14:07

இதை முன்னாடி சொல்லி இருந்தால் இதை பற்றி சர்ச்சை வந்திருக்காது. இதை தற்போது சொன்னதால் இங்கு உள்ள இடதுசாரி அரசியல்வாதிகளுக்கு தற்போது பேச ஒன்றும் இல்லாமல் போனது. பிஜு ஜனதாதல் பொதுவாக நாட்டுப்பற்று உள்ள அரசியல் கட்சி. இந்தியாவிற்கு எதிராக பேசியோ, மத்திய அரசின் நலத்திட்டதிற்கு எதிராக பேசியோ அரசியல் செய்ய மாட்டார்கள். மக்களுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் திட்டங்களுக்கு தடையாக இருக்கமாட்டார்கள். இந்தியாவிற்கு எதிரான இந்தி கூட்டணியிலும் சேராதவர்கள்.


Vathsan
மே 29, 2024 13:31

பாஜக வாரிசு அரசியலை கூட ஆதரிக்கும். ஆனால் தமிழன் ஆட்சிக்கு வருவதை விரும்பாது.


ram
மே 29, 2024 12:51

சரிதான் இவரும் திருட்டு திமுக ஆட்கள் மாதிரி பேசுகிறார்


kalyan
மே 29, 2024 12:43

கனிமவளங்களும், தண்ணீர் முதலியவையும் நாட்டின் பொது சொத்து. குஜராத் இயற்கை வாயு, அசாம் மாநில கச்சா எண்ணெய், பீகாரின் இரும்பு, நாடு முழுவதும் பயன் படுகிறது. அதற்காக அதற்கு தனியாக விலை கொடுக்க முடியுமா? கேரளா, கர்நாடகாவின் தண்ணீருக்கு தமிழகம் விலை கொடுக்க வேண்டுமென்றால் தமிழகமே காலியாகி விடும். எனவே கனிம வள சட்டங்களை திருத்த வில்லை என பாண்டியன் கூறுவது ஒரிசா திராவிட மாடல் தான்


kulandai kannan
மே 29, 2024 11:52

ஜெயலலிதாவுக்கு ஒரு V.K. சசிகலா, நவீன் பட்நாயக்கிற்கு ஒரு V.K. பாண்டியன்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ