உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் ஆட்சியில் சுயசார்பு இந்தியா: கார்கே

காங்கிரஸ் ஆட்சியில் சுயசார்பு இந்தியா: கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' காங்கிரஸ் ஆட்சியில் தான் சுயசார்பு இந்தியா இருந்தது என்பதை பிரதமர் மோடி உணர்வார்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வாக்குறுதி நிறைவேற்றம் என்பதை விட விளம்பரத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதற்கு ' மேக் இன் இந்தியா' திட்டம் மிகச்சிறந்த உதாரணம்.கடந்த 2014 தேர்தல் வாக்குறுதியில் இந்தியாவில் உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவோம் என பா.ஜ.,10 வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அதில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு மற்றும் ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்கு கடுமையாக குறைந்து நிலைமை இன்னும் மோசமாக மாறி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. சிறுகுறு நடுத்தர தொழில்துறை பாதிப்பை சந்தித்துள்ளது. இந்திய தொழில்முனைவோர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவர்கள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் தராமல், அங்கேயே நிறுவனங்களை அமைக்கின்றனர். ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது.இரண்டு முக்கியமான கேள்விகள்1.அடையாளம் காணப்பட்ட 14 துறைகளில் 12 துறைகள் மேம்பட தவறியதால், பரபரப்பாக பேசப்பட்ட ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் முதல் கட்டத்தை மோடி அரசு மூடி விட்டதா2. மோடி ஆட்சியின் கீழ், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் இந்திய பொருட்களின் பங்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது ஏன்ஆனால் இந்தியாவின் வரலாற்றில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தான் வளர்ச்சி பெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் தான் சுயசார்பு இந்தியா இருந்தது என்பதை பிரதமர் மோடி உணர்ந்து இருப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Saai Sundharamurthy AVK
மார் 23, 2025 08:59

நேரு காலத்தில் (1947 ல்) இருந்த இந்தியாவை வீடியோவில் பார்த்திருக்கிறோம். காங்கிரஸ் ஆண்ட 2014 வரை இருந்த இந்தியாவையும் பார்த்திருக்கிறோம். ஆனால், 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு பாஜக மோடிஜியின் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மாறுபட்ட தோற்றத்துடன் உலக அளவில் கம்பீரமாக வளர்ந்து வருவதை இப்போது தான் காங்கிரஸ் பார்த்து வெட்கப்படுகிறது. மோடிஜியின் மனோதைரியம் எந்த ஒரு காங்கிரஸ் தலைவர்களுக்கும் இருந்ததில்லை. தற்போது கூட அந்த கட்சியில் யாருக்கும் இல்லை.


கிருஷ்ணதாஸ்
மார் 23, 2025 07:59

ஹா! ஹா!


Sathyan
மார் 23, 2025 02:53

இதை சொல்வதற்க்கே இந்த ஆளுக்கு இத்தனை வருஷம் ஆகி இருக்கு, இவர்கள் செயலில் ஈடுபட எத்தனை வருடங்கள் பிடிக்கும். இவர்கள் நாட்டை கையில் எடுத்தால் ? தலை சுற்றுகிறது


Sathyan
மார் 23, 2025 01:39

கார்கே மாதிரி மனித உருவில் இருக்கும் குள்ளநரிகள் சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு போவது நம் இந்திய நாட்டுக்கு நல்லது.


Kumar Kumzi
மார் 22, 2025 22:56

உனது பார்வையில் சுயசார்பு என்றால் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கிய மூர்க்க கூட்டம் வந்து ஓட்டு போடலாம் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் குண்டு வைக்கலாம்னு தானே சொல்லவர


ராமகிருஷ்ணன்
மார் 22, 2025 22:33

சுயசார்பு இந்தியா அல்ல முஸ்லிம் சார்பு இந்தியாவாக காங்கிரஸ் ஆட்சி செய்தது, கார்கே புரிந்து கொள்ள வேண்டும்


Velan Iyengaar, Sydney
மார் 22, 2025 22:27

உங்க சொத்து மதிப்பு எப்படி பல நூறு கோடிகள் ஆனது என்பதை வெள்ளை அறிக்கையாக தயாரித்து வெளியீடு...


Yaro Oruvan
மார் 22, 2025 22:02

ஹா ஹா மொதல்ல கான்+கிராஸ் கும்பலுக்கு உன்னால சுய தலைவரா இருக்க முடியுமா ????? போப்ப்பு பொத்திக்கிட்டு படு


R.MURALIKRISHNAN
மார் 22, 2025 21:45

நீர் என்ன கூவினாலும் கூறினாலும் காங்கிரசுக்கு சங்கு ஊதியாச்சு


V.Mohan
மார் 22, 2025 21:19

எவ்வளவு தான் மாத்தி பேசுவீங்க கார்கே பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். உலக அளவுல மேக் இன் இண்டியா திட்டம் பற்றி சிறப்பாக பேசப்படுகிறது. உற்பத்தி துறை பற்றி பேசறீங்களே 1947 லிருந்து 1991 வரை உற்பத்தி துறை வளராமல் இருக்க காங்கிரஸின் லைசன்ஸ் கோட்டா ராஜாங்கம் தான் காரணம் என்பது உலகுக்கே தெரியும். இலக்கு வைத்து அதை அடைவதற்கான வழிகளை சரிப்படுத்தவே பாஜக அரசுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. உடனே கார்கே கட்சிகாரர்கள்ஐயோ பாஜக இலக்கை அடையவில்லை. அதனால் தோல்வி என கூவுகிறீர்களே வரிசையாக நீங்கள் பெயர் வைத்த ஐந்தாண்டு திட்டங்கள் முழுத் தோல்வி அடைந்ததை மறந்து விட்டீர்களே எக்ஸைஸ் டியூட்டி,வாட் வரி, சேவை வரி போன்றவற்றை போட்டு தொழில் துறையை நசுக்கிய காங்கிகளே அடக்கி வாசிங்க கார்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை