உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.32 கோடி சொத்து வரி பாக்கி மந்த்ரி மாலுக்கு மீண்டும் பூட்டு

ரூ.32 கோடி சொத்து வரி பாக்கி மந்த்ரி மாலுக்கு மீண்டும் பூட்டு

மல்லேஸ்வரம்: சொத்து வரியாக 32 கோடி ரூபாய் செலுத்தாத மல்லேஸ்வரம் மந்த்ரி மாலுக்கு நேற்று மீண்டும் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டனர்.மல்லேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற மந்த்ரி மால், பெங்களூரு மாநகராட்சிக்கு, 51 கோடி ரூபாய் சொத்து வரி செலுத்தாமல் இருந்தது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பணம் செலுத்தவில்லை. கடந்த 2023 டிசம்பரில் மாநகராட்சி அதிகாரிகள் மாலுக்கு பூட்டு போட்டனர்.அங்கு வந்த மால் நிர்வாகிகள், அதிகாரிகளிடம் பேசினர். ஒரே தவணையாக 32 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்தனர். மால் நிர்வாகிகள், நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினர். மால் திறக்கப்பட்டது. இதன் பின்னர், நிலுவையில் உள்ள தொகையை செலுத்துமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. நேற்று காலை போலீசார், மார்ஷல்களுடன் மாலுக்கு மாலுக்கு பூட்டு போட சென்றனர். இதை பார்த்த மாலுக்குள் இருந்த பல கடைகளின் உரிமையாளர்கள், தங்கள் கடைகளை பூட்டி விட்டு வெளியேறினர்.இதையடுத்து, மாலின் முதன்மை நுழைவு வாயிலுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை