உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீங்க ரொம்ப லேட்டுங்க; பஞ்சாப் முதல்வரின் பாரிஸ் பயணத்துக்கு வேட்டு!

நீங்க ரொம்ப லேட்டுங்க; பஞ்சாப் முதல்வரின் பாரிஸ் பயணத்துக்கு வேட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டிகளை காண பாரிஸ் செல்ல திட்டமிட்டிருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது. பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுக்கு பின் இந்திய ஹாக்கி அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்தது. நாளை (ஆகஸ்ட் 4) இந்திய ஹாக்கி அணி விளையாட உள்ள காலிறுதிப் போட்டியை நேரில் காண பகவந்த் மான் திட்டமிட்டு இருந்தார்.இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 03) தாமதமாக விண்ணப்பம் அளித்ததை காரணம் காட்டி பகவந்த் மான் பிரான்ஸ் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. மான் கூறுகையில், ''இந்திய ஒலிம்பிக் அணியில், பஞ்சாப் வீரர்கள் மட்டும் 19 பேர் உள்ளனர். ஹாக்கி அணியில் இருக்கும் வீரர்களில் 10 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இந்திய அணி, வலு மிகுந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஹாக்கியில் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

அனுமதி மறுப்பு

இத்தகைய சூழ்நிலையில் தான், இந்திய அணி கால் இறுதியில் விளையாடுவதை நேரில் பார்க்க அனுமதி கோரி விண்ணப்பம் தரப்பட்டது. அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதேபோல 2022ல் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கேட்டபோதும் மத்திய அரசு மறுத்து விட்டது. ஒவ்வொரு பிரச்னைக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு செல்லட்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rpalnivelu
ஆக 05, 2024 10:04

தண்ணி பார்ட்டி


வாய்மையே வெல்லும்
ஆக 03, 2024 16:50

கலப்பினை சரியாக செய்யாத "பிளாஸ்டர் ஆப் பாரீஸ் " போல நொறுங்கி விட்டது பஞ்சாபி முதல்வரின் பாரிஸ் பயண கனவு . இப்படியே ஒவ்வுறுத்தரும் காரணங்க காட்டி வெளிநாட்டு பயணங்கள் செஞ்சா நாடு உறுப்பட்டா மாதிரி தான் .. நம்மூரு தமிழின தலீவரு க்கு அதிர்ஷ்டம் எந்த தடங்கலும் இல்லாமல் போயிட்டு வெளிநாட்டு விசா கிட்டி


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 14:13

புச்சா கண்ணாலம் கட்டினவருபா .... ஊட்டுக்காரம்மா டாக்டர் வேற ... பிசியா இருந்துருப்பாரு ...


cbonf
ஆக 03, 2024 13:30

பஞ்சாப் முதல்வர் மான் ஒரு குடிகாரன். ஏற்கனவே போதையில் ஜெர்மனிக்கு பயணம் செய்து இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார். அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது.


ஆசாமி
ஆக 03, 2024 13:19

இவன் போய் புழைய மாதிரி குடிச்சிட்டு தள்ளாடி மானத்தை வாங்குவான்


P. VENKATESH RAJA
ஆக 03, 2024 13:05

பஞ்சாப் முதல்வருக்கு தேவை தான்.. எதற்கு தாமதமாக விண்ணப்பிக்கிறார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை