உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறைச்சி சேர்க்காத தஹி கபாப்

இறைச்சி சேர்க்காத தஹி கபாப்

அசைவ பிரியர்களுக்கு, கபாப் என்றால், நாவில் எச்சில் ஊறும். சிறியவர் முதல் பெரியவர் வரை, விரும்பி உண்பர். இறைச்சி சேர்க்காமலும், 'தஹி கபாப்' செய்யலாம். ஒரு முறை செய்து பாருங்கள்.தேவையான பொருட்கள்:கெட்டியான தயிர் - 3 கப்பன்னீர் (துருவியது) - ஒரு கப்வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 2முந்திரி பருப்பு - ஒரு கைப்பிடிசீரக துாள் - அரை ஸ்பூன்கரம் மசாலா - அரை ஸ்பூன்மிளகு துாள் - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமல்லி தழை - ஒரு கைப்பிடிகடலை மாவு - இரண்டு ஸ்பூன்பிரட் துாள் - 1 கப்எண்ணெய் - வறுக்க தேவையான அளவுஇஞ்சி - சிறிய துண்டுசெய்முறை:முதலில் தயிரை சுத்தமான வெள்ளை துணியில் போட்டு வையுங்கள். தண்ணீர் வடிந்த பின் தயிரில், துருவி வைத்த பன்னீர், சிறிதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை போடவும். முந்திரி பருப்பை போடவும்.இந்த கலவையில் சீரக துாள், கரம் மசாலா, மிளகு துாள், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி தழை, கடலை மாவை போட்டு நன்றாக கலக்க வேண்டும். அதன்பின் இதை சிறு, சிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கையில் வைத்து கட்லெட் வடிவில் தயாரிக்கவும். இந்த கட்லெட்டுகளை பிரட் துாளில் தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, ஒரு மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்.அதன்பின் அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும், கபாப்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுத்தால், சூடான, சுவையான தஹி கபாப் தயார். மாலை நேர டிபனுக்கு ஏற்றதாகும் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை