உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் ஆணிற்கு பிறந்த குழந்தை

ராஜஸ்தானில் ஆணிற்கு பிறந்த குழந்தை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் என்றாலே மருத்துவத்துறையில்குழப்பமான மாநிலங்களில் முதலிடம் வகிப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வந்துள்ளது புதிய தகவல்ஒன்று. அதாவது மாநிலத்தில்உள்ள கோட்டா நகரில் உள்ள 32 ஆண்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அந்நகர சுகாதாரமையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது மாநில அரசு.அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த குளறுபடிக்கு காரணம் குழந்தை பதிவு விவரத்தில் நடைபெற்ற குழப்பமே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. மேலும் 60 வயதுடைய பெண்கள் ஆண்டிற்கு இரண்டு முறை குழந்தை பெற்றெடுத்துள்ளதாகவும் குழந்தை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திய குழுவினர் மாநிலத்தில் பெண்கள் கல்வி அறிவு பெறாமல் இருப்பதால் மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்ட உதவியை முறைகேடாக பயன்படுத்துவதற்காக இது போன்றபொய்யான தகவல் பதியப்பட்டிருப்பதாக கண்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்