உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ: ரூ.55 கோடி வசூல்

மெட்ரோ: ரூ.55 கோடி வசூல்

பெங்களூரு: பெங்களூரில் பி.எம்.டி.சி., பஸ்களை போன்று, மெட்ரோ ரயில்களும் மக்களின் உயிர் நாடியாக மாறியுள்ளது. தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர் உட்பட, தினமும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர்.வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. போக்குவரத்து நெரிசல், மண், துாசி பிரச்னை இல்லாமல், செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவில் செல்வதால், பலரும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துகின்றனர்.இதுகுறித்து மெட்ரோ உயர் அதிகாரிகள் கூறியதாவது,மெட்ரோவில் நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2023 டிசம்பரில், மெட்ரோ ரயில்களில், 2 கோடியே 13 லட்சத்து 34 ஆயிரத்து 76 பேர் பயணித்தனர். பி.எம்.ஆர்.சி.எல்.,லுக்கு 55 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை