மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
2 hour(s) ago
பெங்களூரு : பராமரிப்பு பணி காரணமாக, எம்.ஜி., ரோடு - இந்திராநகர் மெட்ரோ ரயில் சேவை, இன்று இரண்டு மணி நேரம் நிறுத்தப்படுகிறது.பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மெட்ரோ ரயில்கள் பெரும் உதவியாக உள்ளன. ஒயிட்பீல்டு - செல்லகட்டா; நாகசந்திரா - சில்க் இன்ஸ்டிடியுட் இடையில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆறு லட்சம் பயணியர், பயணம் செய்கின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணியால், ஒயிட்பீல்டு - செல்லகட்டா பாதையில், எம்.ஜி.ரோடு முதல் இந்திராநகர் வரை, இன்று காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, இரண்டு மணி நேரம், ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.ஒயிட்பீல்டு செல்லும் ரயில்கள், இந்திராநகரில் இருந்தும்; செல்லகட்டா செல்லும் ரயில்கள் எம்.ஜி., ரோட்டில் இருந்தும் இயக்கப்படும். இன்று வார இறுதி நாள் என்பதால், பயணியர் கூட்ட நெரிசல் அவ்வளவாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
2 hour(s) ago