உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் சுற்றுப்பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு (நவ.3 முதல் 8 வரை) 6 நாள் அரசு முறை பயணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செல்கிறார்.வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:அமைச்சர் ஜெய்சங்கர் முதலில் ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறார். பிரிஸ்பேன் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை திறந்து வைக்கிறார்.தொடர்ந்து கான்பெரா நகரில் ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்குடன் இணைந்து, 15-வது வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.அந்நாட்டு பார்லிமென்டில் உரையாற்றும் ஜெய்சங்கர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், தொழில்துறையினர், அந்நாட்டு அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.அதன்பிறகு 8-ந்தேதி சிங்கப்பூர் செல்லும் ஜெய்சங்கர், அங்கு நடைபெறும் 8வது ஆசியான் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.அந்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து, இந்தியா- சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ