உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கால் வாரியது கூகுள் மேப்; காரில் சென்ற பெண் பள்ளத்தில் விழுந்தார்!

கால் வாரியது கூகுள் மேப்; காரில் சென்ற பெண் பள்ளத்தில் விழுந்தார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில், கூகுள் மேப் தவறாக வழி காட்டியதால், அதை நம்பி வந்த பெண் ஒருவர் காருடன் தண்ணீர் நிரம்பிய பள்ளத்துக்குள் விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மீட்புப் படையினர் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.மஹாராஷ்டிராவின் நவி மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் பீலாப்பூரில் இருந்து உல்வே என்ற பகுதியை நோக்கி பயணித்தார். கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டி வந்துள்ளார். பீலாப்பூரில் உள்ள பாலத்தை, கூகுள் மேப் காட்டவில்லை. மாறாக அதற்கு அடியில் உள்ள வழியை தவறாக காட்டியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vdz562gl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையறியாத அந்தப் பெண், கூகுள் மேப் காட்டிய வழியில் பயணித்ததால், அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அப்போது அங்கு இருந்த மீட்புப் படையினர் உடனடியாக வந்து அந்த பெண்ணை மீட்டனர். இந்த விபத்தில் அந்த பெண்ணுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிறகு கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து காரும் மீட்கப்பட்டது.இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. தற்போது அந்தக்காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன.கூகுள் மேப் செயலி தவறுதலாக வழிகாட்டும் நிகழ்வு இதற்கு முன்னரும் அரங்கேறியுள்ளது. உ.பி.,யின் பதுன் மாவட்டத்தில் கூகுள் மேப் செயலியை நம்பி காரில் பயணித்தவர்கள், 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தனர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல் கடந்த ஆண்டும் கேரளாவில் சுற்றுலா பயணிகள் கூகுள் மேப் செயலி உதவியுடன் பயணித்தனர். ஆனால், கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய சாலையை செயலி காட்டியது. அவர்களும் அதில் சிக்கி பிறகு ஒரு வழியாக பாதுகாப்பாக வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூலை 26, 2025 20:32

இந்தியன் சி.இ.ஓ வா இருந்தா இப்படித்தான். எப்போ கவுப்பாங்கன்னு தெரியாது


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 26, 2025 20:14

மூளையை முட்டியில் வைத்துக் கொண்டு ஓட்டினா இப்படித் தான்


தமிழ்வேள்
ஜூலை 26, 2025 19:58

இதென்ன பிரமாதம்? இங்கு மெட்ராஸ் சிட்டிக்குள் ஒரு பேட்டையில் குடியிருக்கும் மண்ணின் மைந்தன் பூர்வகுடி தோன்றல் அதே பேட்டையில் அடுத்த தெருவுக்கே கூகுள் மேப் வழிகாட்டிபடி தான் செல்கிறான்.. டூவீலரில் கூட மொபைலை ஹோல்டரில் மாட்டி ரோட்டை பார்க்காமல் மேப்பை மட்டுமே பார்த்தவாறு வண்டி ஓட்டுகிறான்.. இந்த லட்சணத்தில் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஒரு கூத்து.. இந்த மாதிரியான கொடுமையை எங்கே போய் சொல்ல?


Padmasridharan
ஜூலை 26, 2025 19:42

கண்ணுக்கு தெரியும் மனுஷங்கள கேட்கறதுக்கு என்னவாம் சாமி. .


Pandi Muni
ஜூலை 26, 2025 19:53

வழிப்பறி கும்பலை தவிர யாரையும் காணோம் சாமியோவ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை