உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் இன்று முக்கிய ஆலோசனை

ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் இன்று முக்கிய ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக சட்டசபை கூட்டம் இன்று துவங்கும் நிலையில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கவுள்ளது.கவர்னர் தாவர்சந்த கெலாட் உரைக்கு பின், மாநில ம.ஜ.த., தலைவர் குமாரசாமி தலைமையில், இன்று மதியம் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கவுள்ளது.விதான்சவுதாவின், ம.ஜ.த., அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கும் படி, எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பட்ஜெட் தாக்கலின் போது, பேச வேண்டிய விஷயங்கள், கூட்டணி கட்சியான பா.ஜ.,வுடன் சேர்ந்து நடத்த வேண்டிய போராட்டங்கள், லோக்சபா தேர்தலுக்கு தயாராவது, கட்சியை பலப்படுத்துவது, இரண்டு சபைகளிலும் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் உட்பட, பல முக்கிய விஷயங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ