உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொபைல் போன் மோகவெறி; அண்ணனை வெட்டி கொன்ற தங்கை

மொபைல் போன் மோகவெறி; அண்ணனை வெட்டி கொன்ற தங்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: மொபைல் போன் பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை தூங்கும் போது தங்கை வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நண்டாகான் என்ற நகரின் அருகே கைராகார் சுயூகாதன் காண்டாய் ( கேசிஜி ) என்னும் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அடிக்கடி போனில் ஆண் நண்பர்களுடன் பேசியுள்ளார். இதனை இவரது அண்ணன் கண்டித்துள்ளார். மேலும் நண்பர்களிடம் பேசுவதை தவிர்க்குமாறும், போன் பயன்பாட்டை நிறுத்துமாறும் வலியுறுத்தி உள்ளார்.இதனால் ஆத்திரமுற்ற சிறுமி அண்ணன் தூங்கி கொண்டிருந்த போது கோடாரியால் கழுத்தின் தொண்டை பகுதியில் ஓங்கி வெட்டினார். அண்ணன் வீட்டுக்குள்ளே இறந்தார் . இதில் சிறுமி அணிந்திருந்த உடைகள் ரத்தத்தில் நனைந்தன. இதனை துடைத்து விட்டு அருகில் வசிப்பவர்களிடம் அண்ணனை கொன்று விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

canchi ravi
மே 05, 2024 15:16

சத்திஸ்கர் இன்னும் வளரவில்லை என்பது புரிகிறது


வாசு
மே 05, 2024 13:38

அப்பிடிப் போடு அருவாள.. போட்டுட்டார்.இந்தியாவில் காட்டுமிராண்டிகளை உருவாக்கும் டிஜிட்டல்.புரட்சி.


J.V. Iyer
மே 05, 2024 13:01

நாடு எங்கே போகிறது? அட கடவுளே


venugopal s
மே 05, 2024 12:26

நல்லவேளை இது தமிழகத்தில் நடக்கவில்லை, நடந்து இருந்தால் நமது பாஜக அன்பர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு,கல்வி, கலாசாரம், டாஸ்மாக், போதைப்பொருள் என்று மாநில அரசை பின்னி பெடல் எடுத்து இருப்பார்கள்!


GANESUN
மே 06, 2024 14:36

இப்போ மட்டும் வாழுதா ?


GMM
மே 05, 2024 10:37

தியேட்டரில் இடைவேளை உண்டு அத்தியாவசிய பணி நீங்கலாக, ஐந்து நிமிடங்கள் மேல் ஒரு எண்ணுக்கு பேசினால் இணைப்பு தானே கட் ஆக வேண்டும் மறு இணைப்பு சில மணி நேரம் கழித்து கொடுக்க வேண்டும் இது போல் டிவி நிகழ்ச்சி, யூ டியூப் போன்ற அனைத்து பொழுதுபோக்கு இணைப்புகள் ஒருமணிக்கு பத்து நிமிடம் நிறுத்த வேண்டும் கற்பனை என்று கற்பனைக்கு எட்டாத செயற்கை உருவங்கள் மூலம் சமூகத்தை கெடுக்க பல தயாரிப்புகள் இலவசம், அதிக சம்பளம், ஊதாரி செலவுகள் மூலம் பண தேவையில் தவிக்கும் அரசுகள் மக்களை உழைக்க வைக்க, வரி செலுத்த வைக்க முடியவில்லை உரிமம், மது விற்பனை, லாட்டரி போன்றவற்றைகண் மூடி அனுமதித்து பாவ பொருள் ஈட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன


Natchimuthu Chithiraisamy
மே 06, 2024 17:08

அது தான் கலிகாலம்


குமரி குருவி
மே 05, 2024 09:59

மொபைல் போன் பயன்படுத்துவது போதையாகி விட்டதால் கண்டிப்பு என மூர்க்கம் காட்டாமல் இதமாக பேசுவது உயிருக்கு கவசம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை