உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிதமானது காற்றின் தரம் ராஜஸ்தானில் கடுங்குளிர்

மிதமானது காற்றின் தரம் ராஜஸ்தானில் கடுங்குளிர்

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று, குறைந்தபட்ச வெப்பநிலை 6.8 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, சராசரியை விட இரண்டு டிகிரி குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 82 சதவீதமாக இருந்தது. காலை 9:00 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 137ஆக இருந்தது. இது மிதமான நிலை என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

ராஜஸ்தான்

பதேபூரில் நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 1.4 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. மாநிலத்தின் பல இடங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. சிகார் - 2.7, கரவுலி மற்றும் பன்ஸ்வாராவில் தலா 3, சுரு மற்றும் பில்வாரா, பிலானியில் தலா 3.5, அல்வார் - 4.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி