உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இவிஎம் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது: இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழாவில் ராகுல் பேச்சு

இவிஎம் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது: இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழாவில் ராகுல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மின்னணு இயந்திரங்கள் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது என ராகுல்கூறினார். இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழா மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல் வர் ஸ்டாலின், தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி,கர்நாடாக முதல்வர் சித்தராமயைா, காங்., தலைவர் கார்கே, மறறும் மற்ற கட்சி தலைவர்களான சரத்பவார் ,உத்தவ் தாக்கரே, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை மோடி நிறுத்தி விட்டார். மின்னணு இயந்திரங்களை அரசியல் கட்சிகள் முன்பு எடுத்துக்காட்ட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மின்னணு தேர்தல் இயந்திரங்கள் இல்லாமல் மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க முடியவில்லை.ஆனால், ஒரு திருமணத்திற்காக பத்தே நாட்களில் பன்னாட்டு விமான நிலையத்தை ஏற்படுத்தினார்கள்.இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை இயக்குகின்றனர். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தலித்கள் மற்றும் பழங்குடியினர் ஒருவர் கூட கிடையாது.லாபத்தில் இயங்காத பல நிறுவனங்களும் பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்துள்ளது.இந்தியாவில் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை சீன தயாரிப்பு தான். நீங்கள் நினைப்பதை நான் செய்வேன். இது அன்பை பரப்புகின்ற தேசம்.மத்திய அரசின் துறைகள் மூலம் யாத்திரையை முடக்க முயற்சி நடைபெற்றது. இவ்வாறு ராகுல் பேசினார்.

பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் : ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணத்தை நிறைவு செய்த ராகுலுக்கு எனது வாழ்த்துகள். ராகுலை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றவர்; மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ.,வை விரைவில் ஆட்சியிலிருந்து அகற்றுவோம். என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K Subramanian
ஏப் 02, 2024 11:04

Some decency is to be maintained by people and this man is beyond all repairs and he once was calling Modiji a Chowkidar chor hai Shame on this man and its lesser said the better about this man How do people listen to people like him ? Can we take it that Congress wins elections with the help of EVMs in Telengana and other places wherever if at all they win?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை