உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிபர் அல்ல மோடி!

அதிபர் அல்ல மோடி!

பார்லிமென்ட் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் பதவியை போன்று நிலையான பதவிக்காலம் கொண்டது அல்ல, நம் நாட்டின் பிரதமர் பதவி. ஒவ்வொரு நாளும், நீங்கள் பார்லிமென்டுக்கு பதிலளிக்க வேண்டும். சிதம்பரம்,மூத்த தலைவர், காங்கிரஸ்

இப்போது கணிக்க முடியாது!

ஒரு சில இடங்களுக்கு மட்டும் நடந்த சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து எதையும் கணிக்க முடியாது. மக்கள் உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி ஓட்டளிப்பர். சமீபத்திய பொதுத்தேர்தலில் தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றுஉள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிவோம்.ராஜிவ் பிரதாப் ரூடி, முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,

கர்நாடகாவில் வளர்ச்சி இல்லை!

கர்நாடகாவில் எல்லா வளர்ச்சி திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு காரணம் காங்கிரஸ் அளித்த உத்தரவாதங்கள். அவற்றை நிறைவேற்ற பஸ் கட்டணம், பால் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் என எல்லாவற்றையும் உயர்த்தி உள்ளனர். இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விஜயேந்திரா, தலைவர், கர்நாடக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.Natatarajan
ஜூலை 17, 2024 16:29

ஜாமீனில் வெளியே உள்ள சிதம்பரம் தன் மீது உள்ள வழக்கை துரித படுத்தி குற்றமற்றவர் என மக்களுக்கே தெரிவித்துவிட்டு இன்றைய ஆட்சி அவலங்களை பேசலாமே


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 16, 2024 02:27

உண்மையிலே திரு சிதம்பரம் மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார் போல. அமெரிக்கா அதிபராக ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் பதவிவகிக்க முடியாது. ஆனால் இந்த போலி காந்தி குடும்பமும் அவர்களின் கூட்டு களவாணி கட்சி குடும்பங்களும் எத்தனை தடவைகளானாலும் பதவி நாற்காலியை விட்டு இறங்குவது இல்லை. பிஜேபி யில் 75 வயதுக்கு மேல் காதசி பதவி கூட கிடையாது ஆனால் இவர்கள் குடும்பத்தில்?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை