உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி தலைமையில் அமைதி நடவடிக்கைகள்: மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் உறுதி

மோடி தலைமையில் அமைதி நடவடிக்கைகள்: மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: 'மணிப்பூரில் அமைதியை உருவாக்க, மோடி தலைமையிலான ஆட்சியில் மெய்டி மற்றும் கூகி சமூக மக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ஓராண்டுகளுக்கு மேல், வன்முறை நிலவி வரும் சூழலில், பிரதமர் மோடி ஏன் நேரில் செல்லவில்லை? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம் சாட்டி வருகிறார். இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு முதல்வர் பைரேன் சிங் அளித்த பதில்: மணிப்பூருக்கு பிரதமர் மோடி வருவாரா அல்லது வர மாட்டாரா என்ற கேள்விக்கே இடமில்லை. அமைதியை உருவாக்க, மோடி தலைமையிலான ஆட்சியில் மெய்டி மற்றும் கூகி சமூக மக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இங்கு அமைதியை ஏற்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். நாங்கள் முயற்சித்து வருகிறோம். நீண்ட காலமாக இங்கு அமைதி நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜூலை 11, 2024 12:09

ஆமாம், மத்திய பாஜக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மணிப்பூரில் நடப்பதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதைத் தான் அப்படி சொல்கிறாரோ?


மோடிதாசன்
ஜூலை 10, 2024 22:54

நம்ம சபாநாயகர் கவர்னருடன் பஞ்சாயத்து ஏற்படும் போதெல்லாம் சொல்லும் வார்த்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அந்த மாதிரி மனிப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், மனிப்பூர் மைந்தர் சொல்றாரு எல்லாம் மோடிஜி தலைமையில் சரியாத்தான் போய்கிட்டு இருக்கு. நீண்ட நாட்களாக அமைதி நிலவுகிறது என்கிறார். இனிமேலாவது இந்த கூச்சல் கூட்டணி மனிப்பூரை பற்றி பேசாதிருக்க வேண்டும்.


J.Isaac
ஜூலை 10, 2024 21:52

கலவரத்தை உருவாக்கியதே இவர்கள் தானே.


Narayanan Muthu
ஜூலை 10, 2024 19:54

எதையாவது நம்பும்படி சொல்லுங்க...


முருகன்
ஜூலை 10, 2024 18:47

உலகின் பல இடங்களுக்கு செல்லும் பிரதமர் மணிப்பூர் செல்லாமல் இருப்பது ஏன்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை