உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "மீண்டும் மோடி ஆட்சியே" - மோடியே சொல்கிறார்

"மீண்டும் மோடி ஆட்சியே" - மோடியே சொல்கிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: வரும் லோக்சபா தேர்தலில், ' 370 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும். மொத்தம் 400 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெல்லும்' என பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில் நம்பிக்கையுடன் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் ரூ. 7,750 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய பிரதேச மாநில மக்களின் வளர்ச்சிக்காக நாங்கள் இரவு , பகல் பாராமல் உழைத்து வருகிறோம். இரு மடங்கு வேகத்தில் இரட்டை இன்ஜின் அரசு பணியாற்றி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xavqeb1x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காங்கிரஸ் ஆட்சி காலம் ஒரு இருண்ட காலம். கொள்ளை அடிப்பதே காங்கிரசின் உயிர்மூச்சு . மலை வாழ் மக்களின் நலனை நாங்கள் பாதுகாத்தோம். அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்பட்டனர்.வரும் தேர்தலில் 370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 400க்கும் அதிகமான தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெல்லும். ' மீண்டும் மோடி ஆட்சியே வரும் ' . இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ