உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடிநீர் பிரச்னையை மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும்: ஆம்ஆத்மி வலியுறுத்தல்

குடிநீர் பிரச்னையை மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும்: ஆம்ஆத்மி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில் அதிஷி கூறியதாவது: டில்லியில் 28 லட்சம் பேர் குடிநீர் இன்றி, தவித்து வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். பிரச்னையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும். ஜூன் 21ம் தேதிக்குள் தங்களுக்கு உரிய குடிநீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l7uc9hts&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

போராட்டம்

இரண்டு நாட்களுக்குள் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜூன் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். ஹரியானா அரசு தங்களது பங்கு குடிநீரை திறந்து விடவில்லை. மக்கள் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றனர். தண்ணீர் பிரச்னையை தீர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தண்ணீர் திறக்க கோரி, ஹரியானா அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

S. Neelakanta Pillai
ஜூன் 20, 2024 10:32

ஆமாம், இவரது கோரிக்கையை நியாயம் தானே. இதைவிட தங்களது கையாலாக தனத்தை வெளிச் சொல்ல முடியாது. என்ன, இவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்த விட்டு இந்த கோரிக்கையை வைப்பது தான் நியாயம்


ராமமூர்த்தி
ஜூன் 20, 2024 06:12

அப்படியானால் ராஜினாமா செய்க.


அப்புசாமி
ஜூன் 19, 2024 21:29

கேரண்ட்டீ மேடம்.


venugopal s
ஜூன் 19, 2024 20:07

கடந்த பத்து ஆண்டுகளாக கர்நாடகா தமிழ்நாடு இடையே உள்ள காவிரி பிரச்சினையையே கண்டு கொள்ளாதவர் இதைப் பற்றியா கவலைப்படப் போகிறார்?


Nandakumar Naidu.
ஜூன் 19, 2024 17:56

நீங்க எதற்கு? அரசை ராஜினாமா செய்து விட்டு போங்கள். பிறகு மோடிஜி பார்த்துக்கொள்வார்.


HoneyBee
ஜூன் 19, 2024 15:42

ஜெயிலில் இருந்து ஆர்டர் போட்டாரே குடிநீர் பிரச்சினை தீர்க்க. இப்ப எதுக்கு மோடியின் ஆதரவு. கையாலாகாத அரசு இந்த கெஜ்ஜு அரசு.


Indhuindian
ஜூன் 19, 2024 15:41

அதெப்பிடிம்மா இது மாநிலத்தின் அதிகாரத்துக்கு உட்பாது அதுலே எப்படி மதிய அரசு மூக்கை நுஷக்க முடியும் அப்புறம் உங்க புள்ளி கூட்டணியில் இருக்கறவங்கள்லாம் எங்க அதிகாரத்தை மோடி புடுங்கிக்கிட்டாருன்னு கூப்பாடு போடுவாங்களே முதல்லே புள்ளி கூட்டணி கூட்டி அவங்க சம்மதத்தை வாங்குங்க உங்களை பாத்தா பரிதாபமா இருக்கு உங்க தலைவர் அந்த தண்ணியிலே ஒரு நூறு கோடி ரூவா அப்படியே பாதாம் அல்வா சாப்பிடறமாதிரி நுஸுங்கிட்டு இந்த தண்ணி பிரச்னையை உங்க கிட்டே தள்ளி உட்டுட்டாரு என்ன பண்ண முடியும் பேய்க்கு வாஷ்க்கை பட்டா புளியமரத்தில் ஏறாதான் வேணும்


ராமகிருஷ்ணன்
ஜூன் 19, 2024 15:03

ஏன் வாய் கிழிய பேசும் கெஜ்ரிவால் வந்து தீர்க்க மாட்டாரா. தமிழகத்தில் மழை பெய்தால் மோடி வந்து பார்க்கவில்லை என்று குற்றம்சாட்டுவது. தண்ணீர் இல்லாமல் போனால் அதுக்கும் மோடி வரணும். அப்ப நீங்க என்ன செய்கிறீர்கள். ஆட்சியை கலைத்து விட்டு வீட்டுக்கு போயிடுங்க. ஜனாதிபதி ஆட்சி வந்து பார்த்து கொள்வார்கள்.


yts
ஜூன் 19, 2024 14:44

இவருக்கு இதற்கு மட்டும் மோடி வேண்டும்


கௌதம்
ஜூன் 19, 2024 14:21

ஆமா திருட்டுத்தனம் பன்னிட்டு ஜெயில்ல போய் படுத்துக்கோங்க.. உங்களுக்கு விசிறி வீச அவர் வருவார்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை