உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2029லும் மோடி மீண்டும் பிரதமர்; ‛‛இண்டியா கூட்டணி மீண்டும் எதிர்க்கட்சி: அமித்ஷா உறுதி

2029லும் மோடி மீண்டும் பிரதமர்; ‛‛இண்டியா கூட்டணி மீண்டும் எதிர்க்கட்சி: அமித்ஷா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: 2029 லும் ‛ இண்டியா ' கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரும் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்த ஆண்டு மோடி மீண்டும் பிரதமர் ஆக பதவி ஏற்பார் என்றார்.சண்டிகரில் குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்து அமித்ஷா பேசியதாவது: 2029 லும் எதிர்க்கட்சி வரிசையில் அமர இண்டியா கூட்டணி தயாராக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். 2029 ல் பிரதமர் ஆக மோடி மீண்டும் பிரதமர் ஆக பதவி ஏற்பார். கடந்த 3 தேர்தல்களிலும் காங்கிரசை காட்டிலும் பா.ஜ., கூடுதல் தொகுதிகளை கைப்பற்றி உள்ளது எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை.எதிர்க்கட்சியினர் நிலையற்ற தன்மையை விரும்புகின்றனர். இதனால் தான் பா.ஜ., அரசு நீடிக்காது என சொல்லி வருகின்றனர். இந்த பதவிக்காலத்தை முழுமையாக பா.ஜ., நிறைவு செய்வதுடன், அடுத்து நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். எப்படி பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என அவர்கள் பாடம் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

subramanian
ஆக 04, 2024 22:48

2029 , 2034, 2039 பா ஜ க வுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கும். மோடி தான் பிரதமர்.


RAAJ68
ஆக 04, 2024 22:31

இந்த திமுக காரர்கள் உங்களையும் மோடியையும் தரக்குறைவாக விமர்சிக்கின்றார்கள் ஆனால் நீங்கள் அவர்களுக்கு மறைமுக உதவிகள் செய்கிறீர்கள் அவர்கள் நன்றி இல்லாமல் மீண்டும் மீண்டும் உங்களை வசை பாடுகின்றனர் ஆனால் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லை.


Premanathan Sambandam
ஆக 04, 2024 21:20

இப்போது ஒழுங்காக ஆட்சி செய்யப்பாருங்கள் 2029 வரும்போது அப்ப உள்ள நிலைமையை இப்போதே கணிக்க வேண்டாம்


vadivelu
ஆக 05, 2024 07:38

அந்த நம்பிக்கையில்தான் சொல்கிறார். நல்ல ஆட்சியை கொடுப்போம் என்று திடமாக நம்புகிறார்.


Anantharaman Srinivasan
ஆக 04, 2024 20:20

இந்த முறையே 400 எனச்சொல்லி உருண்டு பிரண்டு தான் உட்கார்ந்துள்ளீர்கள். ஓராண்டு முடிவதற்குள் 2029 மீது ஆசை. EVM formula கைவசமிருக்கு. மாட்டிக்காதவரையில் ராஜ்யம் என் கையில் என்கிறார்.


Jysenn
ஆக 04, 2024 19:45

For that to occur in 2029 the BJP should have a brave and bold PM not a docile and timid one like the present incumbent. A man who is capable of promulgating 356 in a few states especially one in the deep south.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 19:03

எதிர்க்கட்சிங்குறது அவங்களுக்கு நிச்சயமா ????


என்றும் இந்தியன்
ஆக 04, 2024 18:31

2029ல் "இண்டியா" கூட்டணி பிந்தியா முந்தியா என்று இரண்டாக பிரிந்திருக்கும், 2034 ல் அது பிந்தியா முந்தியா சந்தியா என்று மூன்றாக பிரிந்திருக்கும்


J.Isaac
ஆக 04, 2024 18:28

நாளை நம் கையில் இல்லை. வயநாடு மக்கள் ,தங்களுக்கு இப்படி ஒரு சோகமான முடிவு வரும் என சிறிதளவு நினைத்திருப்பார்களா?


vadivelu
ஆக 05, 2024 07:40

இதை எல்லா கட்சி கலைவர்களுக்கும் சொல்லுங்கள். தனி மனிதர்களே மறுநாள் என்ன நடக்கும் என்பது புரியாமல்தானே இருக்கிறார்கள்.


Senthoora
ஆக 04, 2024 17:43

முதலில் இந்த 5 வருடங்களை நல்லபடி முடியுங்க. RSS உங்களை விட்டுடுமா?


வீரபாண்டி,அலங்காநல்லூர்
ஆக 04, 2024 18:30

வெளிநாடு வாழ் அறிவாலய அடிமைகள் சங்கம் என்ற ஒன்றை ஏற்று நடத்துவதற்கு நீங்க ஏன் முயற்சிக்க கூடாது?


Mr Krish Tamilnadu
ஆக 04, 2024 17:32

தங்கள் கட்சியின் செயல்பாடுகள் மேல் உள்ள நம்பிக்கை வரவேற்கத்தக்கது. இந்தி பேசுபவர்களின் வாழ்க்கை தரத்தை மட்டும் உயர்த்தாமல், இந்தியர் அனைவரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தினால், உங்கள் நம்பிக்கைக்கு கை மேல் பலன் கிடைக்கும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை