உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

மூணாறு: இடுக்கி மாவட்டம், அடிமாலி அருகே பணிக்கன்குடியில், கட்டுமான தொழிலாளி ஷாலட். இவரது மனைவி ரஞ்சினி, 30. தம்பதியின் மகன் ஆதித்தியன், 4. நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, கணவர் ஷாலட்டை மொபைல்போனில் தொடர்பு கொண்ட ரஞ்சினி, மகனை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். அதிர்ச்சியுற்ற ஷாலட் வேலையிலிருந்து வீட்டிற்கு ஓடி வந்தார். அப்போது, வீட்டினுள் ஆதித்தியன் துாக்கில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். அவரை, மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது வழியில் இறந்தார். ரஞ்சினி வீட்டினுள் துாக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார். வெள்ளத்துாவல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 22, 2025 00:51

மிக மிக கொடுமை. படித்தவுடன் நெஞ்சு கனத்துப்போனது. பிரச்சினைகளுக்கு தற்கொலைதான் பதில் என்றால், இன்று பல லட்சம் பேர் அப்படி இறந்து போவார்கள்.ஆனால் பிரச்சினைகளுக்கு தற்கொலை முடிவல்ல, பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றிபெறவேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை