உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனது மேக்-அப் சாதனத்தை மாமியார் பயன்படுத்தியதால் கடுப்பான மருமகள்: விவாகரத்து கேட்டு வழக்கு!

தனது மேக்-அப் சாதனத்தை மாமியார் பயன்படுத்தியதால் கடுப்பான மருமகள்: விவாகரத்து கேட்டு வழக்கு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மருமகளின் 'மேக்-அப்' பொருட்களை மாமியார் பயன்படுத்தியதால், விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் திருமணத்திற்கு நிகராக சமீப காலங்களில் விவாகரத்து வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. தற்போது கணவன்-மனைவி இடையே ஏற்படும் சின்ன பிரச்னைகளுக்கு கூட விவாகரத்து கேட்டு மனு அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பேசி தீர்த்து கொள்ளும் வகையில் உள்ள பிரச்னைகளுக்கு கூட பெண்கள் கொந்தளிக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் நூதனமான ஒரு விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றம் வந்துள்ளது. ஆக்ரா பகுதியை சேர்ந்த சகோதரிகள் இருவரை அப்பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், முதல் மருமகளின் 'மேக்-அப்' பொருட்களை அனுமதியின்றி மாமியார் அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் கொந்தளித்த மருமகள் மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது பெரிய சண்டையாக முற்றியது. மாமியார் மகனிடம் தன்னை மருமகள் அவதூறாக பேசியதாக கூறியுள்ளார். இதையடுத்து மகன் தனது மனைவியை வீட்டை விட்டு தூரத்தியுள்ளார். மூத்த மருமகளின் தங்கையான இரண்டாவது மருமகளும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் கோபமடைந்த மருமகள்கள், தாய் பேச்சை கேட்டு நடக்கும் கணவர்களுடன் வாழ விருப்பம் இல்லை என்று விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 'மேக்-அப்' பொருளால் மாமியார் - மருமகள் உறவு முறிந்துள்ளது பேசு பொருளாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜன 31, 2024 07:18

Super for a TV serial. தமிழில் டிவி சீரியல் எடுப்பவர்கள் இந்த ஒரு 'கருத்தை' வைத்து, ஒரு 'சிறப்பான' சீரியல் எடுத்து பல வருடம் ஓட்டலாம். நல்ல TRP rating கிடைக்கும். நல்ல advertisement வருமானம் கிடைக்கும்.


meenakshisundaram
ஜன 31, 2024 06:14

கடைசியாக பார்க்கப்போனால் ராமசாமி நாயக்கனால் ஒரு குடும்பம் பிரிந்து இரண்டு குடும்பங்களும் சீரழிந்தன .இதை பாராட்டுபவன் ??


Ramesh Sargam
ஜன 31, 2024 00:16

தமிழில் டிவி சீரியல் எடுப்பவர்கள் இந்த ஒரு 'கருத்தை' வைத்து, ஒரு 'சிறப்பான' சீரியல் எடுத்து பல வருடம் ஓட்டலாம். நல்ல TRP rating கிடைக்கும். நல்ல advertisement வருமானம் கிடைக்கும்.


கண்ணன்,மேலூர்
ஜன 30, 2024 15:53

இந்தியா முழுவதும் இது போன்ற பல புரட்சிப் பெண்கள் உருவாக காரணமாக இருந்து பெண் அடிமைத் தனத்தை ஒழித்த பெருமை பகுத்தறிவு தந்தை ஈ.வெ.ராமசாமி நாயக்கரையே சாரும் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே தந்தை பெரியாரின் மண்ணாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.


sridhar
ஜன 30, 2024 16:37

கால மாற்றத்தின் அடையாளம் இது. வேடிக்கையாக கூட ஈ வே ராவுக்கு எந்த பெருமையும் சேர்த்துவிடாதீர்கள் . எந்த தகுதியும் இல்லாதவன்.


ديفيد رافائيل
ஜன 30, 2024 15:25

சூப்பர்


Indian
ஜன 30, 2024 13:47

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது மெய்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ