உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி பெயரில் மனை ஊழல்; சிக்கலில் மாட்டினார் சித்தராமையா!

மனைவி பெயரில் மனை ஊழல்; சிக்கலில் மாட்டினார் சித்தராமையா!

பெங்களூரு: 'மூடா' முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா தொடர்ந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n88hbfrn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மூடா

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் சித்தராமையா முறைகேட்டில் ஈடுபட்டதாக, பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம், மைசூரு லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்திருந்தார். இதன்படி, முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார்.இதற்கு விளக்கம் கேட்டு, முதல்வருக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நோட்டீசை திரும்ப பெறும்படி கவர்னருக்கு ஆலோசனை கூறும் வகையில், அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில், மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஸ்நேமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோரும், முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னரிடம் அனுமதி கோரினர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17 ஏ வின் கீழ், முதல்வர் மீது விசாரணை நடத்த, ஆகஸ்ட் 17ம் தேதி கவர்னர் அனுமதி அளித்தார்.

காங்கிரஸ் போராட்டம்

இதற்கு எதிராக மாநிலம் முழுதும், முதல்வர் உட்பட காங்கிரஸ் அமைச்சர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், கவர்னர் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி உத்தரவிட கோரி, ஆக., 19ம் தேதி, உயர்நீதிமன்றத்தில் முதல்வர் ரிட் மனு தாக்கல் செய்தார்.இம்மனு மீது, முதல்வர் தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், கவர்னர் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி உட்பட அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதம், இம்மாதம் 12ம் தேதி நிறைவு பெற்றது.மேலும், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், மூடா முறைகேடு தொடர்பாக, முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, ஸ்நேமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, விசாரணையை ஒத்திவைக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு, உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு 17 ஏ வின் கீழ், முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னர் அளித்த அனுமதி சரியாகவே உள்ளது என்று கூறி, சித்தராமையாவின் மனுவை, நீதிபதி நாகபிரசன்னா தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பு அளித்தார். இதனால், சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேல் முறையீடு

இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, மூத்த வக்கீல்களுடன், முதல்வர் சித்தராமையா, அவசர ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 24, 2024 21:42

மனைவிக்கு அல்சைமர் ......... அதனால விசாரிக்கக் கூடாது ன்னு சொல்லுங்க தல ........


sankaranarayanan
செப் 24, 2024 21:31

இவ்வளவு விதிமுறைகளை மீறி ஊழல்களை செய்தும் இவரைப்போன்ற அரசியல்வாதிகள்தான் இன்னமும் பதவி விலகாமல் ஆட்சியில் ஒட்டிக் கொண்டுதான் உள்ளார்கள் இது நாட்டிற்கே ஒரு சாபக்கேடு இவர் உண்மையான ரோஷம் உள்ள மனிதராக இருந்தால் உடனே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீதி மன்றத்தில் வாதாடவேண்டும் செய்வாரா பார்க்கலாம் மக்களே


Barakat Ali
செப் 24, 2024 20:46

இப்பத்தான் சித்தராமையா எங்க தலைவர் கருணாநிதி மாதிரி பேசணும் ....... நான் தலித் என்பதால்தானே என் மீது வழக்கு ன்னு அனல் பறக்க கேள்வி கேட்கணும் ......


சாண்டில்யன்
செப் 24, 2024 19:33

கலகம் செய்து ஆட்சியை பிடிப்பது என்ற கேவலம் ஆரம்பம். தன் வினை தன்னை சுடும் காலம் வரும்.


Barakat Ali
செப் 24, 2024 20:52

சரியாச்சொன்னீங்க .... பொதுவாகவே காங்கிரஸ் தன்மீதான ஊழலைத் தானே விசாரித்து, தானே தனக்கு தண்டனைக்கொடுத்துக்கொள்ளும் ..... அந்த அளவுக்கு நேர்மையான கட்சி .....


என்றும் இந்தியன்
செப் 24, 2024 17:52

சே சே அப்போ அவர் முஸ்லீம் நேரு காங்கிரஸ் திருட்டு முரடர்கள் கட்சி எதுக்குமே லாயக்கில்லை ஊழல் செய்தாலும் கொள்ளை அடித்தாலும் விஞ்ஞான ஊழல் விஞ்ஞான கொள்ளை அப்படி இல்லாத யாரும் மேலே ஒண்ணா கட்சிகளுக்கு லாயக்கே இல்லை


M S RAGHUNATHAN
செப் 24, 2024 17:12

அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோருக்கு தலா இரண்டு பிளாட் பெங்களூரில் ரெடி. சித்தா விற்கு பெயில் ரெடி. ஆகவே நோ ராஜினாமா. பாவம் DK சிவகுமார்


Sridhar
செப் 24, 2024 15:23

காங்கிரெஸ்ல யாராவது ஒருத்தருக்காவது வெக்கம்னு ஒன்னு இருக்குமா? ஆனா, மக்க்ளுக்கே வெக்கம் இல்லாம இவிங்களுக்கு வோட்டு போடும்போது எங்களுக்குமட்டும் ஏன்யா வெக்கம் ம்பானுங்களோ? அப்பீல் மேல அப்பீலா போட்டு கெஜ்ரி மாதிரி ஓட்டி வேற ஏதாவது செஞ்சு அனுதாபம் தேட முயற்சிப்பானுங்களோ? அட ச்சை ...


நிக்கோல்தாம்சன்
செப் 24, 2024 14:56

ஆபிரகாமிற்கு கொஞ்ச நஞ்சமாவா மிரட்டல்கள்


sankar
செப் 24, 2024 14:01

ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே இவர் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் -


Iyer
செப் 24, 2024 13:58

"மாட்டமாட்டார் இந்த வெட்கம் கேட்ட மனிதர்." கர்நாடக HC தீர்ப்பை எதிர்த்து SC ல் மனு தாக்கல் செய்வார்.


புதிய வீடியோ