உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின் வாகனங்களை வாடகைக்கு எடுக்கிறது முனிசிபல் கவுன்சில்

மின் வாகனங்களை வாடகைக்கு எடுக்கிறது முனிசிபல் கவுன்சில்

புதுடில்லி:அலுவலக பயன்பாட்டுக்காக, 28 மின்சார வாகனங்களை, ஐந்தாண்டுக்கு வாடகைக்கு எடுக்க, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் முடிவு செய்துள்ளது.கவுன்சில் அலுவலகத்தில் ஏற்கனவே மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதர வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 28 மின்சார வாகனங்களை ஐந்தாண்டுகளுக்கு வாடகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, 'டாடா நெக்சன்' அல்லது அதற்கு இணையான வேறு ஏதேனும் மின்சார வாகனங்களை டிரைவருடன் சேர்த்து வாடகைக்கு வழங்க, டெண்டர் கோரியுள்ளது. இதற்காக, 3.36 கோடி செலவு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் தலைவர் அமித் யாதவ் கூறியதாவது:கவுன்சில் அலுவலக வாகனங்களை, படிப்படியாக மின்சார வாகனமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதற்கான நிதி, ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாகனம் வாங்கிய தேதி ஒரு மாதத்துக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். வாகனத்தில் அனைத்து நவீன வசதிகளும் இருக்க வேண்டும். அதேபோல, ஜி.பி.எஸ்., மற்றும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வரும், 2024- - 2025 நிதியாண்டில், ஊழியர்களுக்காக மின்சார பைக்குகள் அல்லது ஸ்கூட்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான திட்டம் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ