உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை டூ அயோத்திக்கு முஸ்லீம் பெண் பாதயாத்திரை: ராமர் கோயிலை தரிசிக்க ஆர்வம்

மும்பை டூ அயோத்திக்கு முஸ்லீம் பெண் பாதயாத்திரை: ராமர் கோயிலை தரிசிக்க ஆர்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: மும்பையில் இருந்து அயோதிக்கு முஸ்லீம் பெண் ஷப்னம் ஷேக் நடந்தே வந்தார். அயோத்தியில் இன்று அவர் ஹனுமான் கர்ஹி கோயிலில் பிரார்த்தனை செய்தார்.உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்து மதம் அல்லாதவரும் அயோத்தியில் ராமரை தரிசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் இருந்து 1,425 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அயோத்திக்கு ஷப்னம் என்ற முஸ்லிம் பெண் வந்தார். பின்னர் அவர் ஹனுமான் கர்ஹி கோயிலில் பிரார்த்தனை செய்தார். அவர் அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.இது குறித்து ஷப்னம் ஷேக் கூறியிருப்பதாவது: இந்த பயணம் எனக்கு சவாலாக இல்லை. நான் வேறு எந்த நாட்டில் வாழ்ந்திருந்தாலும் இது சவாலாக இருந்திருக்கும், ஆனால் நான் இந்தியாவில் வசிக்கிறேன். மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களைக் கடந்து அயோத்தி வந்துள்ளேன். மூன்று மாநிலங்களின் போலீசாரும் எனக்கு உதவி செய்தனர். இவ்வாறு ஷப்னம் ஷேக் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 01, 2024 01:05

சூட்லரின் மனைவி கோவில் கோவிலாகப் போயி ஏறி இறங்குவதற்கும் இதற்கும் வித்தியாசம் உண்டுங்களா ????


Rajagopal
பிப் 01, 2024 00:30

ராமனை தரிசிக்க யார் வேண்டுமானாலும் வாருங்கள். இதுவரை ராமனை ஏளனமாகப் பேசி மனம் திருந்தியவர்களும் வாருங்கள். வாழ்க்கையில் ஒன்று பின் ஒன்றாக வந்த கஷடங்களை, எப்படி மனம் நிலை குலையாமல், தருமத்தை ஒவ்வொரு அடியிலும் எடுத்து வைத்து, மாற்றான் மனை பக்கம் கண் வைக்காமல், தனது பத்தினியை மீட்டு வந்த ராமன் எப்படி இந்த உலகில் வாழ வேண்டும் என்று நடந்து காட்டினான். கஷ்டம் இல்லாத மனிதர் இல்லை. கடவுளே மனித உருவில் வந்தாலும் வாழ்க்கையின் மேடு பள்ளங்களை கடந்தே ஆக வேண்டும். ஆனால் அதை செய்யும்போது ஒரு முறை கூட சமநிலை தவறாமல் வாழ்க்கையை நடத்த முடியும் என்று செய்து காட்டியவன். தனது மனைவியை இழந்து, பல கஷ்டங்களைத் தாங்கி, அவளை மீட்டு, பட்டம் சூட்டினாலும், கடைசியில் அவளோடு வாழ முடியாமல் போய்விட்டது. சீதையை அதற்குப்பிறகு ராமன் சந்திக்கவே இல்லை. அப்படியும் அவன் தருமத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்தான். அதனால்தான் அவனை கடவுளாக்கி வணங்குகிறோம். அவன் மீது செருப்பு மாலை போட்டாலும் தாங்கிக்கொள்வான். ஆனால் அதர்மத்தைக் கடைபிடிப்பவனை, மற்றவர்களை துன்புறுத்துபவனைத் தேடிக் கொல்வான். அவனைப் பார்க்க இந்த இஸ்லாமியப்பெண் நடந்து வந்தது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும். நன்றாக வரட்டும்.


Ramesh Sargam
பிப் 01, 2024 00:01

இந்த பெண்ணுக்கு யாரும் ஹிந்து மதத்தை தழுவவோ, ராமரை தரிசிக்கவோ கட்டாயப்படுத்தவில்லை. அவராகவே இப்படி செய்கிறார். அதுதான் ஹிந்து தர்மம். அதுதான் சனாதன தர்மம். ஹிந்து என்பது ஒரு மதம் அல்ல. அது எல்லா மதத்தினரையும் அரவணைத்து செல்லும் ஒரு வாழ்வியல். புரிந்தால் நல்லது. புரிந்தால் புத்தி உள்ளவன். ஜெய் ஸ்ரீ ராம்.


DVRR
ஜன 31, 2024 17:22

குழந்தாய் உனக்கு உன் ஊர் இமாமிடமிருந்து பட்வா வரும். இதே மாதிரி ராமர் கொவில் விலவில கலந்து கொண்ட ஒரு முஸ்லிமுக்கு இன்று பட்வ வந்து விட்டது. இந்த இமாம் இந்துக்களை பார்த்து சொல்வான் இந்துக்கள் Secular Tolerant ஆக இருக்கவேண்டும் என்று முஸ்லிம்னா மனிதன் இல்லை அவன் வெறும் முஸ்லீம் மட்டும்தான்


R S BALA
ஜன 31, 2024 16:11

இதெல்லாம்...


Duruvesan
ஜன 31, 2024 15:18

சகோதரி பத்திரம்


Vijay D Ratnam
ஜன 31, 2024 15:00

வாழ்த்துக்கள் சகோதரி, ஸ்ரீராமரின் பரிபூரண ஆசிபெற்று சகல செளகர்யங்களுடன் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.


mei
ஜன 31, 2024 14:30

இதென்ன விளம்பரம்? முதல்ல தாய் மதத்துக்கு வா பிறகு அயோத்தி போ


Indian
ஜன 31, 2024 14:18

முஸ்லீம் என்ற போர்வையில் ஹிந்து பெண்


வாய்மையே வெல்லும்
ஜன 31, 2024 15:09

இந்தியனின் போர்வையில் உள்ள சாஹீபே உங்க பாட்டனாருக்கு பெயர் ரஹீமா இல்ல இல்ல ராமசாமியாக இருக்கலாம்.. உனக்கு எங்க அதெல்லாம் தெரியப்போவுது..ஹா ஹா ஹா


HoneyBee
ஜன 31, 2024 14:03

இதுதான் சனாதன தர்மம்... நன்றி சகோதரி


Priyan Vadanad
ஜன 31, 2024 20:44

அடப்பாவமே சனாதனத்துக்கு இப்படி ஒரு புரிதலா


மேலும் செய்திகள்