உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "விரைவில் திருமணம் செய்து கொள்வாராம்" - ராகுல் பேச்சு

"விரைவில் திருமணம் செய்து கொள்வாராம்" - ராகுல் பேச்சு

ரேபரேலி: 'விரைவில் திருமணம் செய்து கொள்வேன்' என தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசுகையில் தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8c0aubdk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ரேபரேலி உடனான எங்கள் உறவு, 100 ஆண்டுகள் பழமையானது. சில நாட்களுக்கு முன்பு நான் என் அம்மாவுடன் அமர்ந்திருந்தபோது, எனக்கு இரண்டு தாய்மார்கள்; ஒன்று சோனியா மற்றொன்று இந்திரா என்று சொன்னேன். என் அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை. ஒரு குழந்தையை பாதுகாப்பதும், அக்குழந்தைக்கு வழிகாட்டுவதுமே ஒரு தாய் என அவருக்கு விளக்கினேன். இதனை என் அம்மாவும், பாட்டி இந்திராவும் செய்தார்கள். இது எனது இரு தாய்மார்களின் 'கர்மபூமி'. இதனால்தான் நான் ரேபரேலி தொகுதியில் போட்டியிட வந்துள்ளேன். நமது நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ் மக்கள் நமது அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றுவோம் என்று அவர்களின் தலைவர்களே தெளிவாகக் கூறிவிட்டனர். மத்தியில் காங்கிரஸ் - இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விரைவில் திருமணம்

ரேபரேலியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்., எம்.பி., ராகுல், 'எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள்' என்ற கேள்விக்கு, 'விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Dharmavaan
மே 16, 2024 06:54

இதெல்லாம் செய்தியாக வேண்டுமா? நாட்டுக்கு என்ன நன்மை இதனால்


DARMHAR/ D.M.Reddy
மே 16, 2024 02:05

இப்படியே ஏதாவது புருடால் விட்டுக்கொள்வதே ராகுலின் வழக்கம் உருப்படியாக எந்த காரியமும் செய்யாதவரை மக்கள் கேலி செய்யாமல் விடுவார்களா ?


DARMHAR/ D.M.Reddy
மே 16, 2024 01:47

கிழிஞ்சது கிருஷ்ணாபுரம்


Ramesh Sargam
மே 15, 2024 20:17

நேரடியாக அறுபதாம் கல்யாணம் அதாவது சஷ்டியப்த பூர்த்தி வாழ்த்துக்கள் ராகுல்.ஆமாம், யார் பெண் என்று சொல்லவே இல்லையே


Seenu Krishnamurthy
மே 15, 2024 13:58

காங்கிரஸ் மூட்டை கட்டிய பிறகு என்ன செய்யுறது


kumarkv
மே 15, 2024 00:09

நல்ல படியாக கல்யாணம் பண்ணி, இந்திய அரசியலை விட்டு போய், இந்தியாவை காப்பாற்று


C.SRIRAM
மே 14, 2024 23:15

உளறியிருக்கிறார் இந்த ஆளுக்கெல்லாம் இந்தியாவில் அமையாது இந்திய பெண்கள் புத்திசாலிகள்


Siva
மே 14, 2024 21:35

எந்த நாட்டுக்காரி ? உன் பாட்டி முதல் எல்லோர்க்கும் வேற நாட்டுக்காரி / காரன தான புடிக்கும் ? இந்தியாவில் ஆள் இல்லையே ?


ராமகிருஷ்ணன்
மே 14, 2024 10:58

எல்லாம் 3 தலைமுறை சித்தவைத்திய சிகாமணிகள் இருக்குற தைரியம் தான் பப்பு.


ஆரூர் ரங்
மே 14, 2024 07:40

யார் அந்த அதிர்ஷ்டசாலி நபர்?


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ